1. யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொன்டு போலீஸ் போகிறதே… அதற்குபின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா?
போலீஸ்கிட்ட நாமதான் சரி பண்ணி(கி)ட்டு போகணும். போலீஸ் சரி பண்ணி(கி)ட்டு போகணும்னா நீங்க அரசியல்வாதியா இருக்கணும். பணக்காரனா இருக்கணும் இல்லை மிகப் பெரிய ரௌடியா இருக்கணும். அவங்க வீட்டுக் கதவையெல்லாம் போலீஸ் உடைக்காது
2. எல்லா டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்டிஸ்ட் கோட் போட்ருக்காங்க? (பெரிய கொடுமை என்னனா… ஆபிசில எங்க மேனேஜர்ஐ பார்த்தா எனக்கு ரோபோ சங்கர் ஞாபகம் வந்து பலமா சிரிச்சிர்றேன்…)
நார்மலா நாம சொன்னா .. எம்.ஜி. ஆர் சொன்னார் "என் இரத்தத்தின் ரத்தமான அன்பு உடன்பிறப்புகளே" அப்ப்டின்னு முன்னால் யார் சொன்னார்ங்கற பேரைச் சொல்லிச் சொல்வோம். மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் அந்த Quote க்கு உள்ளே உள்ளதை மட்டும் தான் சொல்வாங்க. அதைச் சிம்பாலிக்கா காட்டத்தான் அதே மாதிரி ஒலிக்கிற கோட் (க்வோட்) போட்டிட்ருக்காங்க. அவங்க கோட்டுக்குள்ள. அவங்க சொல்றது க்வோட் டுக்கு உள்ளே!
3. டெலிபோண்ல நம்பர்கள் மேலருந்து கீழ இருக்கு…. கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்கு ???
டெலிஃபோன்ல பில் ஏறும். கணக்கு போட்டா இருப்பு குறையும் அதனாலதான்,
4. மூக்குலயும் வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா ??
விடலாமே.. நான் மூக்கால விடறேன்.. நீங்க வாயால விடுங்க
5. விமானத்திலேயோ இல்லை நம்ம ரேஜ்ஜுக்கு பஸ்லயோ போகும் போது பாதியில் விபத்துக்குள்ளாகி நாம் பிளைத்துக்கொண்டால், டிக்கெட் பணத்தை திருப்பி கொடுத்திருவாங்களா?? (நாம தான் ஊருக்கு போய்ச்சேரலையே ?? )
அது டிக்கெட் எடுக்கிறவங்களுக்கு, நீங்கதான் டிக்கட் எடுக்கலியே.. (மேல் உலகத்துக்கு). எடுத்திருந்தா செத்திருப்பீங்களே . அப்புறம் எதுக்கு பணம் திருப்பித் தரணும். டிக்கட் எடுக்காததுக்காக வேணும்னா ஃபைன் போடுவோம்.
6. கோழி முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார்? (கோழி வித்தியாசமா கக்கா போகுதுன்னு விடாம அதை எடுத்து சாப்பிட்டிருக்கான் பாருங்க)
பாம்பு...
7. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதிமன்றம் சென்றால் அவர்களும் "கீதை" மேல் சத்தியம் செய்ய வேண்டுமா ???
சத்தியம் பண்ணி என்ன உண்மையாச் சொல்றாங்க?
8. விளம்பரங்களில் "இலவசப்பரிசு" என்று சொல்கிறார்களே… பரிசுனாலே அது இலவசம் தாணே…. இல்லயா??
வெற்றிப் பெற்றவர்களுக்குத்தான் பரிசு. இங்க தோற்கறவங்களுக்கு (மட்டமான பொருளை வாங்கறதால) கொடுப்பதால இது இலவசப் பரிசு. ஆறுதல் பரிசுன்னு கூடச் சொல்லிக்கலாம்.
9. Numberஐ ஏன் ஆங்கிலத்தில் சுருக்கமா எழுதும் பொது No. ணு எழுதுறோம் ?? Numberல Oங்கர எழுத்தே இல்லையே???
ஓ இல்லை அப்படின்னு தானே No அப்படின்னு சொல்றாங்க. No O - இதைத்தான் இரண்டாவது ஓ வைக் குறைச்சு புள்ளியாக்கிட்டாங்க. No.
10. ஆண்கள் சட்டை மற்றும் பேண்ட் ஏன் எப்பவும் 38, 40, 42, 44 மற்றும் 28, 30, 32, 34 என்று இருக்கிறது? ஏன் 39, 41, 43 அல்லது 29, 31, 33 என்று வருவதில்லை ??
"Odd man out" செத்துட்டான். அதனால்தான் Even நம்பர்ல இருக்கு.
11. இந்த சேல்ஸ் ரெப்லாம் ஏன் எப்பவும் tie கட்டிறுக்காங்க….???
வியர்வையைத் துடைச்சிக்க.
12. சினிமா DVDய reverseல சுத்தினா படம் reverseல ஒடுமா??
DVDயைச் சுத்தினா படம் ஓடாது. யாரோ உங்களை முட்டாளாக்கிட்டாங்க. அது உண்மைன்னா நம்ம தயாரிப்பாளர்கள் ஒரு டிவிடி வாங்கிச் சுத்திகிட்டே இருப்பாங்க. அவங்க தயாரிச்ச படம் ஓடிகிட்டே இருக்கும்.. (ம்ம் அப்படித்தான் கடைசி மயிர்க்கால் இருக்கிற வரைக்கும் பிச்சிக்கணும்.)
13. "அவனுக்காக நான் நாயா உழைச்சேன்னு" எல்லாரும் சொல்றானுங்களே… நாய் எண்னைக்கு வேலை செய்திருக்கு…. ஒரு ஓரமா படுத்து வால் ஆட்டிட்டு இருக்கும்… இல்லையா ???
வாலாட்டினதைத்தான் சொல்றாங்க. உண்மையா உழைச்சிருந்தா மாடா உழைச்சேன் என்றுதான் சொல்வாங்க.
14. கண்னு பெருசா இருக்குறவங்களுக்கு கண்னு சிறுசா இருக்குறவங்கள விட sideல அதிகமாக பார்க்க முடியுமா???
கண்ணைச் சிறிசாக்கினால்தான் சைட்ல அதிகமாக பார்க்க முடியும். கண்ணு பெரிசா இருக்கறவங்களுக்கு இமையும் பெரிசா இருக்கும். அதனால அதிகமாக மறைக்கும். அதனால தானிக்கு தீனி சரிப் போயிந்தி.
15. ஏன் சில்லரைகாசு சொல்றோம்.
சில்லறை ரூபா நோட்டும் இருக்குதுண்ணு உங்களுக்குத் தெரியாதா.. என்ன பழனியில சில்லறைக் காசு விக்கிற பிசினஸ் செய்யறீங்களா? ஆமா சில்லறை வியாபாரி கடையில 1000 ரூபாய்க்கு பொருள் வாங்கினா எப்படி எட்டணா நாலணா, 1 ரூபா 2 ரூபா 5 ரூபா இப்படிக் காசா கொண்டு போய் கொட்டுவீங்களா?
16. ஏன் நடுசெண்டர்-ன்னு சொல்றோம்
கம்ப்யூட்டர் செண்டர், ஷாப்பிங் செண்டர் இப்படி பல செண்டர்கள் வந்துட்டதாலே நடுசெண்டர்னு குறிப்பா சொல்ல வேண்டிய அவசியம் வந்தது
17. ஏன் கண்ணாடிகிளாசு-ன்னு சொல்றோம்.
ஓ அப்ப உங்க ஊர்ல பிளாஸ்டிக் கிளாஸ், எவர்சில்வர் கிளாஸ் அப்புறம் பேப்பர் கிளாஸ் எல்லாம் கண்ணாடியில் செய்யறாங்களா சொல்லவேயில்லை.
18. ஏன் காம்பெளண்டுவால்-ன்னு சொல்றோம்
சிம்பிள் வால் உங்களுக்கு மட்டும் சொந்தம். காம்பவுண்டு வால் இரண்டு வீடுகளுக்கு மத்தியில் இருக்கலாம். ஒருபக்கம் உங்களுக்குச் சொந்தமாகவும் இன்னொரு பக்கம் விளம்பரம் செய்யறவங்களுக்குச் சொந்தமாவும் இருக்கலாம்.. இல்லைன்னா தெருநாய்கள், கழுதைகள் இப்படிப் பலர் சொந்தம் கொண்டாடலாம். அதனால காம்பவுண்ட் வால்.
19. Teaயில ஒரு பல்லி செத்துக்கிடந்தா பாய்ஸன்! ஆனா, பிரியாணியில ஒரு கோழியே செத்துக் கிடக்குதே!! கொஞ்சம் யோசிங்க!!!
- பிரியாணி வாங்க காசு இல்லாத வாலிபர்கள் சங்கம்
BOY தான் SON ஆக இருக்க முடியும். கோழி பெண்ணாச்சே. அதனால பாய்சன் ஆக முடியாது.
20. ஹோட்டல்ல காசில்லைன்னு சொன்னா மாவாட்ட சொல்லுவாங்க. அப்ப, பஸ்ல காசில்லைன்னு சொன்னா பஸ் ஓட்ட சொல்லுவாங்களா?
ஹோட்டல்ல காசில்லைன்னு சொன்னா ஹோட்டலையா ஆட்டச் சொல்றாங்க? இல்லைதானே. பஸ்ஸில எப்படிக் காசில்லாமப் போகும். கண்டக்டர் கிட்ட அம்புட்டு காசு இருக்கே
21. ஆட்டோ டிரைவரால ஆட்டோ ஓட்ட முடியும். ஆனா Screw டிரைவரால Screw ஓட்ட முடியுமா?
ஓட்டலாமே, ஆட்டோ மாதிரி ஸ்க்ரூவுக்கு பெட்ரோல் போடுங்க.. ஆட்டோ மாதிரி மீட்டர் வைங்க.. அப்பால அந்த மீட்டருக்குச் சூடுவைங்க.. அப்பால எங்கப் போகணும்னு சொல்லுங்க..
22. வாழ்க்கையில 1000 கஷ்டம் வரலாம், 1000 துனபம் வரலாம்.ஆனா ஒண்ணு மட்டும் நல்லா தெரிஞ்சுக்கோ!
1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1
1 11 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1
1 1 1
ஒண்ணச் சொல்லிட்டு இப்படி ஒவ்வொண்ணாச் சொல்றது நல்லா இல்லை. ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆனா என்ன செய்யறது
23. சர்தார் 1 : எதுக்கு மேனேஜர் உன்னை திட்டினார்?
சர்தார் 2 : மேனேஜரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல அட்வர்டைஸ்மென்ட் கொடுக்க சொன்னார். நான் 'மேனேஜர் நாயைக் காணோம்'னு அட்வர்டைஸ்மென்ட் கொடுத்துட்டேன்
வள்ளுன்னு விழுந்தப்பவே நினைச்சேன். விளம்பரத்தில உன் பேரைப் போட்டியா அவர் பேரைப் போட்டியா? அவர் பேரைப் போட்டிருந்தா அவரோட மேனேஜர்கிட்ட அவரை மாட்ட வச்சிடலாம்..
24.
நீ என்னை
ஒவ்வொரு முறை
கடந்து செல்லும்பொழுதும்
என் இதய துடிப்பு அதிகரிக்கிறது
ஆயிரம் மடங்கு!
ஏன் தெரியுமா?
சாதரணமா பேய் கடந்து போனா
அப்படிதான் ஆகும்.
இப்போ பயங்கரமா கடந்து போகப் போகுதே.. இதயம் என்னாகும்?
25. நெப்பொலியன் : 'முடியாது'ங்கற வார்த்தையே என் அகராதியில் இல்லை.
சர்தார்ஜி : அதை இப்ப வந்து சொல்லி பிரயோஜனமில்லை. அகராதியை வாங்கறதுக்கு முன்னாடியே நீங்க செக் பண்ணி வாங்கியிருக்கணும்.
நெப்போலியன் ; முடியாது
26. டீக்கடைக்காரர் கபடி விளையாண்டால் எப்படி விளையாடுவார்?
கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ
அவனுக்கு அடுத்து அவன் ஸ்கூல் டீச்சர்படிக்க படிக்க படிக்க படிக்க படிக் கபடிக் கபடிக்
27. பசு மாட்டுல இருந்து பசும் பால் கிடைக்கும் ஆனா
எரும மாட்டுல இருந்து எறும்பு பால் கிடைக்கும??
எறும்பு பால் உங்களுக்கு எதுக்கு? எருமை மாட்டை எறும்புப் புத்துமேல நிக்க வச்சிக் கறந்து பாருங்க.. அடுத்த நாளே உங்களுக்கு (எறும்புப்) பால்.
28. கா, கான்னு கத்துரதால காக்காவ காக்கான்னு சொல்லுறோம். ஆனா மா,மா ன்னு கத்துரதால பசுவ மாமான்னு சொல்றோமா???
பசுவுக்கு தன்னடக்கம் அதிகம் அதனால சுயப்புகழ்ச்சி பிடிக்காது. அது மாமா ன்னு கூப்பிடுவது உங்களை.
29. அடிச்சி பிடிச்சா அது பஸூ
பிடிச்சி அடிச்சா அது கிஸூ
பிடிச்சு வைச்சு அடிச்சா
அவர் ஃபாஸூ (Boss)
பிடிச்சு வச்சு அடிச்சா அது போலீஸூபிடிச்சு அடிச்சு வச்சா அது ஆணிஅடிச்சு வச்சுப் பிடிச்சா அது கியாஸ்லைட்அடிச்சு பிடிச்சி வச்சா அது தண்ணிவச்சு அடிச்சு பிடிச்சா அது சூதாட்டம்வச்சு பிடிச்சு அடிச்சா அது எலி...போதுமா!
//9. Numberஐ ஏன் ஆங்கிலத்தில் சுருக்கமா எழுதும் பொது No. ணு எழுதுறோம் ?? Numberல Oங்கர எழுத்தே இல்லையே???//
ReplyDeleteஅது numéro என்னும் லத்தீன/பிரெஞ்சு எழுத்திலிருந்து வந்தது. ஜெர்மனில் Nummer --> Nr.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்ட் டூ நீங்க சொல்றது உண்மையான காரணமாச்சுங்களே...
ReplyDeleteஇங்க கடிக்கணுமே.. அதான் கடிச்சிருக்கேன்...
இங்க இருக்கிற கேள்விகளெல்லாம், கித்துவமா மத்தவங்க சொல்ல.. பதில்களெல்லாம் ஞான் பறைஞ்சதாக்கும்..
romba romba romba njoy pannnen. Last one...hmmmm...excellent. Finally u made me to post a comment. Thanks
ReplyDeletesooper,appadipodu.
ReplyDeletemudiyala ... ratham varadhu
ReplyDelete