Monday, December 21, 2009

தாமரை பதில்கள்

புதியதோர் உலகம் செய்ய விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியமா?

அவசியமா என்ற கேள்வியே தவறுன்னு நினைக்கிறேன். விஞ்ஞானமும் மெய்ஞானமும் இணைந்துதான் இருக்கின்றன, இரண்டும் ஒரே இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

விஞ்ஞானத்தினால் கண்டுபிடிக்க முடிந்ததை மெய்ஞானத்தினால்தான் பக்குவமாகச் சமுதாயத்திற்குக் கொண்டு போய்ச் சேர்க்க முடியும்.

எந்த ஒரு கண்டுபிடிப்பையும் சரியாகப் பயன்படுத்த பக்குவப்பட்ட மனம் தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட மனதைத் தரவல்லது மெய்ஞானமே!!!

விஞ்ஞானத்தையும் மெய்ஞானத்தையும் பிரித்துப் பார்ப்பதற்குக் காரணம், மக்களுக்கு ஆரம்பமும் புரியவில்லை, முடிவும் தெரியவில்லை.. பூமி தட்டையானது என்று சொல்கிறோமே. அதைப் போன்ற ஒரு தோற்றப் பிறழ்வு..

எப்படி விஞ்ஞானத்தில் குறுகியகால நோக்குடைய ஆராய்ட்சிகள், நீண்டகால நோக்குடைய ஆராய்ட்சிகள் உண்டோ, மெய்ஞானத்திலும் அது உண்டு அல்லவா?

இதற்கு முன்பே ஒரு திரியில் எழுதி இருக்கிறேன் (ஆத்திகம் நாத்திகம் ஒரு தெளிவு!)ஆன்மீகமும் விஞ்ஞானமும் ஒரு காலத்தில் கை கோர்த்துக் கொண்டிருந்தன என்று, இன்றைய நிலைக்கு முக்கியக் காரணம் தொலைநோக்கு இல்லா மனித மனம்தான்.

மனங்கள் குறுகிப் போய்விட்டன. மதங்கள் மூடியக் கதவுகளுக்குப் பின் மூச்சு முட்டிக் கிடக்கின்றன, விஞ்ஞானம் பித்துப் பிடித்து தெருக்களில் தலைவிரி கோலமாக அலைந்து கொண்டிருக்கின்றது,

இப்படி 99.99 மனிதர்கள் இருந்தாலும், மிச்சமிருக்கும் சில விஞ்ஞானிகளும் மெய்ஞ்ஞானிகளும் இலக்கை நோக்கிப் பயணித்தபடியே இருக்கிறார்கள்..

புதியதோர் உலகம் செய்ய


விஞ்ஞானமும் மெய்ஞானமும் இப்பொழுதும் கைகோர்த்துக் கொண்டுதான் இருக்கிறது,..

விஞ்ஞானிகள் மெய்ஞானிகள் என்று தங்களைப் பிரித்துக் கொண்டு வரித்துக் கொண்டு வறுத்திக் கொள்பவர்கள் கொஞ்சம் உண்மையை உணர்ந்து தங்களை மாற்றிக் கொண்டால் போதும்.

No comments:

Post a Comment