Monday, December 21, 2009

தாமரை பதில்கள்

நீங்கள் நீங்கள் குவாண்டிட்டி ஈட்டர் இல்லை குவாலிட்டி ஈட்டர் என்று சிவா.ஜி அண்ணா சொல்லி இருக்கிறார். அதனால் விளைந்தது இந்தக்கேள்வி. ஒருவரிடம் இல்லாத விசயத்தைதான் அவர்களால் அதிகம் பேசப்படுகிறதா?


அதை சிவாஜி சொல்லலை. நான்தான் சொன்னேன்.

தன்னிடம் இல்லாததைப் பற்றிக் கவலைப் படுவது பொதுவான மனித குணம். ஆனால் அந்த மனித குணத்திற்கும் நான் சாப்பாட்டைப் பற்றி பேசுவதற்கும் சம்பந்தம் இல்லை..

100 பேர் வரவேண்டிய பார்ட்டிக்கு 99 பேர் வந்தா வராத ஒருத்தரைப் பற்றிப் பேசி பாதிப் பொழுது ஓடிப்போயிரும்.

இல்லாத ஒன்றைப் பற்றி அடிக்கடிப் பேசுகிறவர்கள் அதை அடைய ஆசைப்படுகிறார்கள். அதனால்தான் அதைப் பற்றி பேசுகிறார்கள். நமக்கு கிடைக்காது என்று முடிவு செய்துவிட்டதைப் பற்றி நாம் பேச விரும்புவதில்லை

ஆனால் இதற்கும் சமையல் சாப்பாடு பற்றி நான் பேசுவதற்கும் சம்பந்தமில்லை.

நான் சாப்பாட்டை பற்றி மிகவும் சிலாகித்துப் பேசுவதற்கு காரணம் ..

சற்று யோசிச்சுப் பாருங்க,,, மனுஷன் எதை எதை எப்படி எப்படி சமைச்சு சாப்பிடலாம் என ருசி ருசியா எவ்வளவு ஆராய்ட்சி செய்து கண்டு பிடிச்சிருக்கான் பாருங்க.

சமையலில் உள்ள நுட்பங்கள். மருத்துவமும் ருசியும் கலந்த அறிவியல் சமையல்.

ஆறு வருஷம் சமயலை ஒரு கடமையாப் பார்க்காம, ஒரு பொழுது போக்கா பார்க்காம இரசிச்சு, அனுபவிச்சு கற்றுக் கொண்ட நுட்பங்கள் அதனால் ஏற்படும் வியப்புகள் இப்படி கடவுளை எப்படி வியக்கிறோமோ, நமக்குப் பிடிச்ச தலைவர்களை எப்படி வியக்கிறோமோ இன்னும் சரியாச் சொல்லப்போனா, காதலி ஐஸ்கிரீம் சாப்பிட்டா அதிகம் சிலிர்ப்பது ஐஸ்கிரீமா அவள் உதடுகளா என சிலிர்க்கும் காதலனைப் போல () அப்படி நான் வியப்பதால் அதிகம் அதைப் பற்றிப் பேசறேன். கிடைக்காததால் இல்லை..

பொழிப்புரை: ஒரு விஷயத்தைப் பற்றி அதிகம் பேசணறம்னா

1. அந்த விஷயம் ரொம்பப் பிடிச்சு இருக்கணும்.
2. கண்ணுக்கெட்டின தூரத்தில ஆனா கைக்கெட்டாத தூரத்தில இருக்கணும்

நான் சாப்பாடு விஷயத்தில் காட்டும் இரசனைக்கு இந்தப் பதில் பொருந்தாது, அது ஒரு மாதிரி பக்திப் பரவசம். இறைவா உன் கருணையே கருணை அப்படின்னு கண்ணீர் விட்டு பரவசம் ஆவாங்க இல்லையா? அந்த உணர்ச்சி.

.

No comments:

Post a Comment