கிறுக்குக் கேள்வி..
"அதிர்ஷ்டம் ஆர்டினரி தபாலில் வரும்.. ஆனால் தரித்திரம் தந்தியில் வரும்"ன்னு சொல்றாங்களே..
ஏன் அப்படி..???????
அந்தக் காலத்தில மனுஷனுக்கு விலங்குகளை வேட்டையாடிச் சாப்பிட்டே ஆகணும்.
அந்தக் காலத்தில அதிர்ஷ்டக்காரனை நரி முகத்தில் முழிச்சவன் என்று சொல்லுவார்கள். ஏன் தெரியுமா?
நரி இருக்கில்லையா நரி. அது காலங்காத்தால சிறுவிலங்குகள் தூங்கற நேரம் பார்த்து பின்னால போய் லபக்குன்னு பிடிச்சிருமாம்..
காலையில எழுந்திருக்கிறப்ப நரியைப் பார்த்தா பக்கத்தில எதோ ஆடு இருக்குன்னு அர்த்தமாம், அதனால வேட்டையாட அலைய வேண்டியதில்லை, நரிகிட்ட இருந்து காப்பாத்தி நம்ம வயித்தில பத்திரமா வச்சுக்கலாம்..
அதனால ஆடு - நரி அதிர்ஷ்டம் அப்படின்னு சொல்லுவாங்களாம்.
அது தான் ஆர்டினரி அதிர்ஷ்டமா மாறிப்போச்சாம்..
இதுவே சமுதாயம் வளர்ந்த பின்னாடி சலவையில் ஆர்டினரி / அர்ஜண்ட் அப்படின்னு இரு பிரிவுகள் வந்தபின்பு ஆர்டினரி அதிர்ஷ்டத்துக்கு கனெக்ஷன் ஆயிடுச்சு.. அதோட கனெக்ஷன் வச்சிருந்த கழுதையும் கனெக்ட் ஆயிடுச்சி. ஆர்டினரி சலவைக்கு பொதி சுமக்கும் கழுதையைப் பார்த்தா யோகம் வரும்னு ஒரு நம்பிக்கை வந்ததே இதனாலதான். கழுதை கனெக்ஷன் ஆனப்ப - கழுதைப் பால் கனெக்ஷன் ஆகி அதிர்ஷ்டம் ஆர்டினரி (கழு)த-பால் ல வரும் அப்படின்னு மாறிடிச்சி,
தரித்திரம் தந்தியில வரும்னாங்க.. தந்தின்னா யானை.. யானை மாதிரி தின்னுகிட்டே இருந்தா தரித்திரம் வந்திருமாம்..
...
No comments:
Post a Comment