Wednesday, December 16, 2009

சங்கத்தமிழ் - இங்க வாழ்க்கை!




புறநானூற்று மருதம்
அகநானூறாய் 
குறிஞ்சியாய் குறிஞ்சி
முல்லை பாலை
நெய்தல்



புறநானூற்று மருதம் - வயல்

அகநானூறாய் - ஊடல் கொண்டது.. அதாவது விளையவில்லை..

குறிஞ்சியாய் குறிஞ்சி - குறிஞ்சி மலர் போல எப்பொழுதாவது கூடல் (குறிஞ்சியின் அகப் பொருள்)

முல்லை பாலை - இருத்தல் - பிரிதல்

நெய்தல் - இரங்குதல்



முதற்பொருள் :

வயல் ஊடல் கொண்டு விளைச்சல் அற்று விட, கூடல் குறிஞ்சியாய் அபூர்வமாய் எப்பொழுதாவது மலர, இருத்தலும், பிரிதலுமாய் இரக்கத்திற்கு ஆளானது வாழ்க்கை.


இரண்டாம் பொருள் :

நெய்தல் - நெய்யப்படுதல்

வயல்கள் ஊடல் கொண்டு விளைச்சல் பொய்த்து விட, அபூர்வமாய் நடக்கும் கூடலானது இருத்தல் பிரிதலான வாழ்க்கையை நெய்துவிடுகின்றது.

No comments:

Post a Comment