Friday, December 11, 2009

கண்ணீர் அருவி!

என் மேல் பொழிந்த
பனித்துளிகளே
என்னுள் இறங்கி
இதயப் பாறையில்
இறங்க முடியாமல்
கண்ணின் வழியே
கசிந்து ஒடி
அலறுங்கள் அருவியாய்
என் இதயம் போலவே!!! 


--------------------------------------------------------------------------------------------------


பாறையாய் இறுகிய என் இதயம்
உள்ளுக்குள் அலறி அழுது கொண்டு

அன்பு கொண்டவனே
உன் கரிசனப் பார்வைகளும்
அன்புச் செயல்களும்
காதல் அர்ச்சனைகளும்
இந்த இதயப் பாறையில் இறங்காது..

மலைமேல் பொழியும் பனித்துளிகள்
பாறைகளுக்குள் இறங்க முடியாமல்,
ஊற்றாய் இறங்கி
பெருத்த சத்தத்துடம்
அருவியாய் விழுவதைப் போல

உன் அந்த அன்புச் செயல்கள்
கண்ணீராய் என் கண்கள் வழி
என் இதயத்தின் அலறலைச் சுமந்து கொண்டு
வெளியேறுகின்றன..இதைத்தானுங்க அந்த வரிகளில் அடக்கி இருக்கிறேன்..

இன்னும் புரியலைன்னா! என்னை அடிக்க வராதீங்க.. 

இதயம் பாறையான காரணம் என்னவோ.

பாறை உருவாக பலவழிகள்

1.. எரிமலையாய் வெடித்து வேதனை நெருப்புக் குழம்பு தெறித்து குளிர்ந்து இறுகி

2. அடுக்கடுக்காய் படிந்த மணல்கள் மன அழுத்தத்தில் இறுகி

3. தண்ணீராய் இருந்த மனம் சில்லென்று உறைந்து பனிப் பாறையாய்


கவிதை அருமை.அதிலும் இந்த வரி அலறுங்கள் அருவியாய்.

 அம்பூட்டு மேல இருந்து கீழ விழற அருவி அலறிகிட்டே தானே விழும்,, ரோலர் கோஸ்டர்ல நாம வேகமா கீழ வர்ரோம்.. அப்ப எப்படி அலறரோம்...

துளிர்க்கும் கண்ணீர் சிரிக்கும், தெறிக்கும் கண்ணீர் அலறும். அலறுதா இல்லை சிரிக்குதா என்பது அந்தக் கண்ணில இருக்கிற கண்ணின் ஒளியை வச்சுத் தெரிஞ்சிக்கலாம் இல்லையா..


ஆனாக்கா இங்க பல ஜாம்பவான்கள் இருக்காங்க. இவர் கஷ்டப்பட்டு எழுதி இருக்காரேன்னு .. கண்ணில கண்ணீர் பூக்க  பார்த்துட்டு மௌனமா நகர்ந்திடறாங்க..

கசியும் கண்ணீர் இரக்கத்தாலும் கருணையினாலும்
வழியும் கண்ணீர் (அய்யய்ய இது அந்த வழியல் இல்லீங்க) வேதனையினால்
பெருகும் கண்ணீர் ஆற்றாமையினால்
சொட்டும் கண்ணீர், ..கண்ணிலேயே அடைந்து நிறைந்து கண்ணீரணை உடைத்து
வெள்ளமாய் ஓடும் கண்ணீர் என ஒவ்வொரு வகையான கண்ணீருக்கும் ஒவ்வொரு குணமிருக்கு. இல்லையா?

இதைப் படிச்சிட்டு உங்க கண்ணில
ஆனந்தக் கண்ணீர்..ஊறுது இல்லீங்களா??

என்ன செய்யறதுக்கா.. இப்படி கவலைகளை கரைத்து வடியும் கண்ணீர் ஒண்ணுதானே நமக்குத் துணை.படிச்சதும் கண்ணீர் தளும்புது இல்லையா...??

சிந்தும் கண்ணீர்
உதிரும் கண்ணீர்

என இன்னும் சில கண்ணீரும் உண்டே

கண்கள் அழுதாலும்
கண்மணி சிரிக்கும்
கண்ணீரில் முகம் கழுவிசிவாஜி :

பதிவை இட்ட உடனே வாசித்தேன்....அந்த நேரத்தில் எனக்கு சரியாக விளங்கிக்கொள்ளமுடியாததால்...ஏதாவது அச்சு பிச்சுன்னு பின்னூட்டம் போடக்கூடாது என்று அமைதியாய் இருந்துவிட்டேன்.உங்களின் விளக்கத்தைப் பார்த்தபிறகுதான்...இவ்ளோ விஷயம் இருக்கான்ன்னு தோணிச்சு.

சரிதான் ...எந்த உணர்வுகளுக்கும் வடிகால் கண்ணீர்தானே.துக்கம்,கோபம்,ஆற்றாமை,பெருமிதம்,ஆனந்தம்,நெகிழ்ச்சி,கழிவிரக்கம்...என அனைத்தையும் இந்த அருவிதானே..அமைதியாகவும்,ஆர்ப்பரிப்புடனும் வெளிப்படுத்துகிறது.
இதயத்தின் மௌனமொழியை உப்பு மையால் கன்னக்காகிதத்தில் எழுதும் வாக்கியங்கள்.
வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.
அய்யோ சிவாஜி, இப்படியெல்லாமா ஃபீல் பண்ணி கண்ணீர் விடுவது... ஓ சிவாஜின்னாலே ஓவர் ஃபீலிங் தானோ!!!


 இங்கே வந்து இரு சொட்டுக் கண்ணீர் உகுத்துச் சென்ற அனைவருக்கும் நன்றி. விமர்சனம் செய்தால் கண்ணீர் துளிகள் பனிக்கும் விழிக்கடையோரம்..

.

No comments:

Post a Comment