Tuesday, December 8, 2009

பேமானி என்பது ஏன்?

லொள்ளு வாத்தியாரின் அத்தனைப் பட்டங்களையும் வெளியுலகத்திற்கு கொண்டு வந்தே ஆகணும்னு கங்கணம் கட்டிகிட்டு இருக்கற மாதிரி தெரியுது.. அவரோட டைரியை படிச்சீங்களா என்ன?

சரி சரி தெரியாதவங்களுக்குச் சொல்றேன் கேளுங்க..

நம்ம மாவீரர் லொள்ளுவாத்தியாரோட மனைவிக்கு மான் வளர்க்கணும் னு ரொம்ப ஆசை.. கல்யாணமான புதுசில,

அன்பே!
சீதை மாதிரி
பொன்மான் கேட்கிற
பெண்மான் இல்லை..
ஒரு புள்ளிமான் போதும்...

காட்டுக்கு வேட்டையாடப் போனா
கண்ணி வைத்து பிடித்து வந்தால்,
கண்ணினும் மேலாய் போற்றி வளர்ப்பேன

.
அப்படியென்று தன் மான்விழிகள் படபடக்க மன்னரைக் கேட்க, மன்னர் யோசிக்காம

உனக்கில்லாத மானா?
இருந்தால் விட்டிடுவேனா?
காட்டில் உள்ள மான்களே
என் கஸ்தூரி மானின்
இதயம் கவர்ந்த புள்ளி மான்களே!
மன்னவன் வருகிறேன்..

என வீரவசனம் பேஏசிட்டு வேகமா வெளிய வந்தாரு..

உச்சி வெய்யில் நடுமண்டையில் நச்சுன்னு அடிக்க, பாதி வழி வந்தபின் தான் சுயநினைவிற்கு வந்தார். அய்யோ காடா? அங்க சிங்கம் புலி கரடி எல்லாம் இருக்குமே? தன்னைக் கரடி ஒருமுறை மூஞ்சியில காறித் துப்பி, இந்தப் பக்கம் வந்தே கொதறிடுவேன்னு துரத்தி விட்டது நினைவிற்கு வர, தொடை நடுங்க அங்கே இருந்த குட்டிச்சுவர் மேல உட்கார்ந்துட்டாரு..

அப்போது ஓவியன் அந்தப் பக்கமா வந்தாரு.. மன்னரோட வேர்த்து விறு விறுத்த முகம் கண்டு பதறிப் போய் விசாரிச்சு விஷயத்தைச் தெரிந்சுகிட்டாரு.. அப்புறம் அந்தப் பக்கமா சுத்திகிட்டு இருந்த ஒரு ஆட்டைப் பிடிச்சு வர்ணம் தீட்டி மானா மாத்தி வாத்தியார் கிட்ட கொடுத்தார்.

மாவீரர் லொள்ளு வாத்தியார் அந்த ஆட்டு மானைக் காட்டி மனைவியின் அன்புமழையில நனைஞ்சிகிட்டு இருந்தப்ப அந்த மான் "பே" என்று கத்தியது...

மஹாராணி சட்டுன்னு விலகி என்ன இது இந்த மான் ஆடாட்டம் கத்துதேன்னு கேட்க இது எங்க நாட்டு புது வகை மான்.. பேரு "பேமான்" என்று சொல்லி சமாளிச்சாரு.

பட்ட காலிலே படும்கற மாதிரி அன்று இரவு பெய்த மழையில் மானோட வண்ணம் கரைந்து போக ஆட்டுக்குட்டி பரிதாபமா முழிச்சுகிட்டிருந்தது..

மஹாராணி, மான் ஆடானதைப் பார்த்து மாவீரன் லொள்ளு வாத்தியாரை அக்னிப்பார்வை பார்க்க, அவர் வெடவெடத்து, தண்ணீரில் நனைந்த கோழிக்குஞ்சைப் போல நடுங்கியபடியே எல்லாத்தையும் கடகடன்னு ஒப்பிச்சிட்டாரு..

அப்ப இருந்து தான் "பேமான்" என ஆட்டைக் காட்டி ஏமாத்தினதால வாத்தியாருக்கு பேமானிங்கற பட்டப் பேர் வந்தது.. ஒவியனோட வண்ணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. (வண்ணங்கள் இழந்த தூரிகை கதை இப்ப புரிந்ததா??)

பே என்று கத்தும் ஆட்டைக் காட்டி மான் என ஏமாற்றியதால் ஏமாற்றும் அனைவருக்கும் பேமானி என்ற பெயர் சொல்லி அழைக்கப்படுகிறது.

லொள்ளு வாத்தியார் இதை ஒத்துக் கொள்ள மறுக்கலாம். அப்படிச் செய்தாலும் அவர் பே மானி தான். எப்படின்னா?

மான் - என்றால் இந்தியில் ஒத்துக்கொள் என்று அர்த்தம்..
பே-மான் - என்றால் ஒத்துக் கொள்ளாத என்று அர்த்தம்..
பேமானி என்றால் ஒத்துக் கொள்ளாதவர் என்று அர்த்தம்..
(ஸ்வரம் - பே-ஸ்வரம் - ஸ்வரமில்லாத)

ம்ம்ம்.. பாவம் வாத்தியார்,

..

2 comments:

  1. I hope u wrote this for fun...:).

    ReplyDelete
  2. அட கண்டு பிடிச்சிட்டீங்களே! சமத்து !

    ReplyDelete