Tuesday, December 8, 2009

மதில் மேல் பூனை!!!

கேள்வி:

மதில் மேல் பூனைன்னு சொல்றாங்க... ஏன் மதில்மேல் எலி இல்ல மதில் மேல் புலின்னு சொல்லகூடாது??

பதில்:

மதில் மேல் பூனை − மைன் தில் மே பூ நஹி

மைன் − நான்
தி − இதய
மே − த்தில்
பூ − பூமி
நஹி − இல்லை

நான் இதயத்தில் பூமி அல்ல..

அதாவது நான் பொறுமையில்லாதவள்..

அந்தக் கதையைக் கொஞ்சம் கேளுங்களேன்..

நம்ம ஓவியன் ஒரு சேட்டுப் பொண்ணுகிட்ட சேட்டை பண்ணிகிட்டே இருந்தான். உங்க வீட்டுக்கு வரவா? கோழி அடிச்சி கொழம்பு வைக்கிறயான்னு எக்கச்சக்க விசாரிப்பு..

பொண்ணும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தா.. அவன் முன்னால விரலை ஆட்டி மை தில் மே பூ நஹி அப்படின்னு சொல்லிட்டுப் போயிட்டா..

நம்ம ஓவியன் அதைத் சரியா தப்பா புரிஞ்சிகிட்டு அவங்க வீட்டு மதில் மேல, பூனை மாதிரி ஏறினான்.. அங்க அந்தப் பக்கம் 4 அடி உயரத்துக்கு கொழு கொழுன்னு ஒரு அல்சேஷன் நாய் ஓடி வந்து ஜொள்ளு வடிய நிக்க.

சரி திரும்பப் போயிடலாம்னு பார்த்தா அந்தப் பொண்ணோட அண்ணன் கடோத்கஜன் மாதிரி நாலு தடியன்களோட நிக்கிறான்..

பாவம் ஓவியன், மதில் மேல் குப்புறப் படுத்துகிட்டான்..

நாயோட சத்தம் கேட்டு வந்தப் பொண்ணோட அப்பன் கோன் ஹை அப்படின்னு கேட்க..

ம்ம்ம்.. மதில் மேல் பூனைன்னு சொல்லிட்டு விழுந்துப் புரண்டு ஓடினான் ஓவியன்..

அது தெரிஞ்சதிலிருந்து எல்லாரும் மதில் மேல பூனை .. மதில் மேல பூனைன்னு ஓவியனைக் கிண்டல் செய்ய அது பழமொழியாவே மாறிப் போச்சு.!!!!

No comments:

Post a Comment