Tuesday, December 1, 2009

ராசாத்தி!!!



கண்ணீரைப் பிழிந்தெடுத்து காதலுக்கு பாய்ச்சினேன்
கண்ணோர சம்மதத்துக்கு காலம்தோறும் ஏங்கினேன்
என்னருமை கண்மணிக்கு என்னாசை தெரியலை
என்னவுன்னு எடுத்துச்சொல்ல எனக்குமொண்ணும் புரியலை
ராசாத்தி உம்மனசில ராசாவா எப்போ நானிருப்பேன்..



கண்ணீரைப் பிழிந்தெடுத்து. .



தினமுன்னைக் காணாமே தூங்கப்போக முடியலை
 துடிக்கிற மனசுக்கு என்னவுன்னு சொல்லியழ
காளைநெஞ்சை பறிச்சிகிட்டு போறவளே சின்னபுள்ளே
காதல் மனம் வாடுறதை பார்த்துமா மனசுவல்லே
ராசாத்தி உம்மனசில ராசாவா எப்போ நானிருப்பேன்..



கண்ணீரைப் பிழிந்தெடுத்து..



கண்ணிரண்டும் சுட்டதிலே காயம்பட்டு நோகுதம்மா
காவி வேட்டி கட்டிகிட்டா காதல்மனம் மாறிடுமா - உன்
கல்யாணம் ஆகும்வரை காத்திருப்பேன் பூங்குயிலே
மாங்கல்யம் ஏறயிலே போகுமடி என்னுயிரே
ராசாத்தி.. ராசாத்தி.. ராசாத்தி.. ராசாத்தி...



கண்ணீரைப் பிழிந்தெடுத்து..


.

No comments:

Post a Comment