Thursday, December 17, 2009

நிழலுக்கு உயிர் கவிதை - 2


கண்ணீர் வற்றியவனும்
தண்ணீர் வற்றியவனும்.


கல்யாண அவசரம்
ஜோடி மாறிப்போச்சு
ஒன்று பெப்ஸி கம்பெனி
இன்னொன்று கோக்கோ கோலாவாம் 

அழிந்து போகாதாம் பிளாஸ்டிக்!
அழிந்து போகும்
பாத ரேகைகள்
அணைத்துக் கொண்டன
பாசத்துடன்..

என்னையும் உன்னையும்
எறிந்து விட்டது உலகம்
ஆனால்
அவர்களால்
நம்மை அழிக்க முடியாது!

காலி பாட்டில்
தாய்தான்..

உள்ளிருந்த ஈரத்தையெல்லாம்
உறிஞ்சி எறிந்து விட்டுப்
போனான் மகன்..

அவளும்
யார் காலடியையோ
அண்டிப் பிழைக்கிறாள்..

ஒட்டிய வயிறு
தாங்கும்
ஒட்டிய வயிறு!!!
உழைக்கும் மக்களின்
கால்தூசுப் பட்டு
உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன
பிளாஸ்டிக்கே!!!

இவர்கள் நசுக்கப்பட்டதுக்கு ஒருவனே காரணம்..
நசுக்கப்பட்டவர்களின் கூட்டணி..
ஒருவரை ஒருவர் காத்துக் கொண்டு...
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு!!!

தலை முதல் கால் வரை
வெளி நாட்டு மோகம்!!
செத்தும் கொடுத்தான்
சீதக்காதி பிளாஸ்டிக்...

நீருக்காக ஒரு யுத்தம் வருமாம்..
விஞ்ஞானச் சோதிடர்களின் கணிப்பு!!!

அந்த யுத்தபூமியின்
செத்தபிணங்களின் மீது
உழைத்து உரமேறியதால்..
வீழாமல் நிற்கும்
உழைக்கும் கால்கள்...

கையாலாகதது
காலாலானது
நசுங்கின
பன்னாட்டுக் கம்பெனிகள்.

அழிக்க முடியாச் சூரனைப் படைத்து
அவனையே (மயில்) வாகனமாக்கிப்
பயணம்
மனிதனும் இறைவன்தான்,,

எங்களாற்றுத் தண்ணீரைக்
கொள்ளையடிப்பவனே!
உமிழ்ந்து விடு
நீயுறிஞ்சிய கடைசித் துளி வரை!!!

.

1 comment:

  1. அழுக்கேறிய பாதங்களும், நசுங்கின பாட்டிலும், வாகாய் கட்டப்பட்ட துணியும், தன் பின்புலத்தில் செறிவான புன்சிரிப்பும், உடலெங்கும் எளிமையும்
    காட்டும் மனிதனின் படைப்புத்திறனை
    மீண்டும் மீண்டும் பறைசாற்றுகின்றன.
    இந்த புகைப்படம் 2 ம் முறையாய் கண்ணில் படுகிறது.
    உங்களின் பார்வைகள் வேறுவிதமாயும் உள்ள பார்வைகளை காட்டினாலும் திரும்ப திரும்ப எனக்குள் புன்சிரிப்பே அரும்புகிறது.
    எளிய மனிதனும் அவனது மூளையும் !!!

    ReplyDelete