Wednesday, December 2, 2009

அல்வா!

அல்வா முதன் முதல்ல கொடுத்தது யாரு தெரியுமா?

நீங்களா?

இல்லை ஔவையார்..

ஔவையாரா? எப்படிச் சொல்றீங்க? நாலு கொடுத்து மூணு வாங்குனத வெச்சிச் சொல்றீங்களா?

அதேதான்!!!


பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலம்செய்
துங்கக் கரிமுகத்து தூமணியே நீயெனக்கு
சங்கத் தமிழ்மூன்றும் தா

அப்போ ஆனைக்கு அல்வா வாங்குன வகைக்கான செலவு சரிதாங்குறீங்க!

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு

கலந்து அப்படீங்கற வார்த்தை தான் டேஞ்சர் ...

வெல்லப்பாகுல, பருப்பு (பாதாம்.. பிஸ்தா.. பாசிப்பருப்பு இந்த மாதிரி)
போட்டு பாலும் தேனும் சேர்த்து கலந்து கிண்டினா கிடைப்பது என்ன?

அல்வாதானே..

மூணு குடு நாலு தர்ரேன்னு சொல்லிட்டு ஒண்ணுதானே கொடுக்கிறாங்க.. அதுவும் அல்வா..

என்னப்பா ஒவ்வொருத்தரும் ஒவ்வொருத்தருக்கா.. அல்வா கொடுக்கிறீங்க..

No comments:

Post a Comment