Tuesday, December 1, 2009

உண்மையும் விசுவாசமும்

நான் சொல்வது எந்த அளவிற்கு உண்மை என்று எனக்குத் தெரியாது!
ஆனால் என் இதயத்திற்கும் கடவுளுக்கும் விசுவாசமாக, நான் எனக்கு உண்மை எனத் தெரிந்ததைச் சொல்கிறேன்.

உண்மையும் விசுவாசமும் மனிதனின் இருகால்கள் போன்றவை. மனிதன் இவற்றினாலேயே உயர்ந்து நிற்க முடிகிறது. தான் சொன்னபடி நடக்க முடிகிறது. தனது தடத்தை உலகில் பதிக்க முடிகிறது,

எளிமையும், உண்மையும் விசுவாசமும் இல்லா இடத்தில் பெரிதாய் ஒன்றும் இருப்பதில்லை.

உண்மைக்கான உயிர்துடிப்பே, சுதந்திரத்திற்கான உயிர்துடிப்பாகும். இவை சமுதாயத்தின் தூண்களாகும். நமக்கு சுதந்திரத்தைத் தந்த அதே உண்மைதான் நமக்கு சந்தோஷத்தையும் தரவல்லது.

விசுவாசமாய், நேர்மையாய் இருப்பதினாலேயே உண்மையைப் பேச இயலுகிறது. விசுவாசம் என்பது என்னவென்றால் நம் மனதிற்கு உண்மையாய் இருத்தலே ஆகும்.

வரலாற்றினைப் புரட்டிப் பார்த்தால், உண்மையும் விசுவாசமும் உள்ளவர்களே உயர்ந்திருக்கிறார்கள் எனப் புரியும்.

உண்மையே நம்மிடமுள்ள மிக உயரிய சொத்து ஆகும்.

நாம் எப்பொழுதெல்லாம் பொய் சொல்கிறோம் தெரியுமா?

1. நாம் பயந்திருக்கும் பொழுது
2. நமக்கு விஷயங்கள் தெரியாது என்று எண்ணும்பொழுது
3. நம்மைப் பற்றி பிறர் என்ன நினைப்பார்களோ எண்ணும்பொழுது
4. மற்றவர்கள் நம் குறைகளை அறிந்துகொண்டு விடுவார்களோ என்று என்னும் பொழுது.


ஆனால் ஒவ்வொரு முறை நாம் உண்மை பேசும் பொழுதும், மேலும் மேலும் வலிமையடைகிறோம்.

உண்மைதான் உலகத்திலேயே மிகச் சிறந்த வாதமாகும். ஒருவன் தன் நண்பனுடன் கொள்ளும் மிகப்பெரிய ஒப்புமை என்னவென்றால், நம்மிடையே உண்மை என்றும் நிலவட்டும் என்பதே!

விசுவாசமாய் நான் உண்மையைச் சொல்கிறேன், மதிப்புமிக்க ஒரு வாழ்வினை வாழ்வதற்காக.

.

No comments:

Post a Comment