Tuesday, December 1, 2009

ஆசிரியருக்கு ஒரு ஆசிரியப்பா!!!உள்ளத் துள்ளுறை உயர்பெருந் தகைசால்
தெள்ளத் தெளிந்த அறிவுடை பெரியோய்
வள்ளட் டன்மையிற் வான்மழைக் கொப்போய்
உள்ளங் கனிந்தே உரைப்பது கேளாய்
கரையாச் செல்வம் கல்வியாம் அமுதை
உரைகளில் அள்ளி உவப்புடன் ஈந்து
பாலில் பட்ட பைம்புனல் தன்னை
பாங்குடன் அன்னம் பகுப்பதைப் போலே
நூலில் கற்ற நுட்பத்தில் எல்லாம்
நுணங்கிடும் நன்மையை நுகர்ந்திட வைத்தாய்
வாழ்வில் வளத்தை வனப்புடன் இணைத்த
வாழும் தெய்வம் வாழியவே
நீங்காப் புகழுடன் நிறைவுற வாழியவே

.

No comments:

Post a Comment