Tuesday, December 1, 2009

வேலை!!!


என்னை
உன் இதயத்தில் வைத்தாய்
உன் இதயத்தை
எனக்கே தந்தாய்

நீ என்ன
பேக்கேஜிங் செக்சனில்
வேலை செய்கிறாயா???  

அப்போ அவள் கிட்ட இப்பொழுது இதயமே இல்லையா?

என் இதயத்தை
உன்னிடம்
இழந்தேனென்றேன்

மகிழ்ந்தாய்
மணம் புரிந்தாய்
இன்று ஏன்
ஏசுகிறாய் என்னை

இதயமில்லாதவன் என்று!  

காதல் செய்யும் பொழுது இதயத்தை கொடுத்தாய் -திருமணத்தில் எதை கொடுத்தாய் அவளிடம்?

வேறு என்ன சுதந்திரத்தை..

சுதந்திரத்தை கொடுத்தீர்களா இல்லை சுதந்திரத்தை பறித்தீர்களா?

என்ன கொடுப்பேன்
எதைக் கொடுப்பேன்
என்று எண்ணும் முன்னே

உன்னைக் குடு....
உன் சுதந்திரம் குடு... .
இன்னும் என்ன மிச்சமிருக்கோ
அதெல்லாம் குடு...

பர்சைக் குடு
பீரோ சாவியைக் குடு...
சேலை வாங்கிக் குடு...
ச ங்கிலி வாங்கிக் குடு...
கால் கொலுசு வாங்கிக் குடு..

குடு..குடு...என்று
"குடு"ம்பஸ்தன் ஆக்கி விட்டார்கள்..  

நீங்கள் சொல்வதை பார்த்தால்,... விட்டால் "குடு குடு" வென்று ஓடிவிடுவீர்கள் போலிருக்கிறதே...

குடுகுடு என்று ஓடுவது இளமனம்..
குடு, குடு என்று ஓட்டுவது திருமணம்..  

இதற்குத்தான் மொத்தமாக மணவறையில் அவள் அப்பாவிடம், சின்னவசுல போட்ட ஜட்டில இருந்து ....பிறக்கப்போகும் குழந்தையின் தொட்டில் வரை சேர்த்து வாங்குகிறீர்களே! அப்புறம் என்ன ஓய் கொடுக்க வேண்டிதானே..

அங்க கூட அப்பாதானே "குடு" க்கிறார் -  

அப்பாவி "குடு குடு" கிழவன் ஆகும் வரை... "குடு குடு" என்பவள் குரல் ஓயாது... "குடு குடு" ப்பை காரன் வந்தாலும் உம் நிலை மாறாது அய்யா... அவளுடைய "அப்பா"வி டம் அவன் பணம் கேட்டிருந்தால், அப்"பாவி"யாக அவனும் ஓர் நாள் தன் மகளுக்கு UPல ஆவி போற வரைக்கும் "குடு"க்க வேண்டியது தான்...

இப்ப சொல்லுங்க வரதட்சணை என்பது பெண்(மாமியார்) ஆணுக்கு(அப்பாவிற்கு) செய்யும் கொடுமைதானே!!!

.

No comments:

Post a Comment