Tuesday, December 1, 2009

இயற்கை!

சுற்றிலும் பார்க்கிறேன். அதிசயிக்கிறேன்..
கடவுள்தான் நமக்காக என்னவெல்லாம் படைத்திருக்கிறார்
மலைகள்.. ஆறுகள்... மரங்கள்... கடல்கள்
வானம்.. சூரியன்...வெண்ணிலா... நட்சத்திரங்கள்
விலங்குகள்.. பறவைகள்.. பூச்சிகள்.. நாம் மனிதர்கள்...
அனைத்துமே வியக்கத்தக்க இயற்கையின் பகுதிகள்...

மழையையும், வெயிலையும், காற்றையும், புயலையும்
தாங்கி வரும் பருவங்கள்
நீலப் பெருங்கடலை அலைக்கை வீச வைத்து
பசுங்காடுகளை தலயாட்டி ரசிக்க வைத்து
பொன்னிற பாலை மணல்களின் தலைசீவி
அமைதி காக்கும் வெண்பனிச் சிகரங்களாடு
கிசுகிசுக்கின்றன

ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு ரகசியம்..
தனித்தன்மையாக

தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள், கோள்கள், என இயற்கை
அனைத்தையும் அழகான
மாலையாக கட்டி இருக்கிறது
மாற்றி மாற்றி மாற்றங்களுடன்
வேற்றுமையில் ஒற்றுமை
அதுதான் இயற்கை

இயற்கை கழிவுகளை எடுத்துக் கொண்டு
நமக்குத் தேவையானதைக் கொடுக்கிறது..
இதுவன்றோ மறுசுழற்சி

இயற்கையோடு வாழும்பொழுது
இணைந்து வாழ்வோம்
இணைந்து வாழ்வோற்கு
அது இணையில்லா பரிசளிக்கிறது
கூட்டுறவும் இயற்கையின் பரிசல்லவா?

இயற்கை நமக்கு
உணவளிக்கிறது
உடையளிக்கிறது
உறைவிடமளிக்கிறது
அளவில்லா சக்தி
இயற்கையில்
அடங்கிக் கிடக்கிறது

சூரிய ஒளியாக
சூறாவளிக் காற்றாக
மின்னலாக
நீரோட்டமாக

ஒவ்வொரு அணுவிலும்
இயற்கை ஆற்றலை
அடைத்து வைத்திருக்கிறது
இயற்கையே பேராற்றலாய்..


இயற்கை மந்திரம் :


அழகு இயற்கையானது
இயற்கை அழகானது..

.

No comments:

Post a Comment