Tuesday, December 1, 2009

ஆசிரியர்!

இது அனிருத்தின் கன்னி மேடைப் பேச்சு!

அன்பு ஆசிரியர்களே! அருமை நண்பர்களே!

என் பெயர் அனிருத். என் ஆசிரியரின் பெயர் சௌம்யா!
இங்கு எனது ஆசிரியரைப் பற்றிய என் உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.

புன்னகை முகமும், மென்மையான பேச்சும் அவரின் அடையாளங்கள்..
அவரின் கற்பித்தல் புதுமையானது, ஒவ்வொரு குழந்தையும் ஒரே மாதிரியாக கற்றுக் கொள்வதில்லை. அதே போல் எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான ஆர்வங்கள் இருப்பதில்லை.. பலநேரங்களில் அவர் கற்பிக்கிறார் என்றே நாங்கள் உணர்வதில்லை..

அவர் விளையாட்டுகளின் மூலம் கற்பிக்கிறார், கதைகளின் மூலம் கற்பிக்கிறார், பாடல்கள் மூலம் கற்பிக்கிறார்.. சில நேரம் இதைப் போல்.. போட்டிகளின் மூலம்

இப்போது எங்களுக்கு எழுத்துக்கள் தெரியும்.. எண்கள் தெரியும், வண்ணங்கள் தெரியும், நாட்கள், மாதங்கள், வருடங்கள், கோடுகள், கட்டங்கள், வட்டங்கள், வடிவங்கள்.. மரம் செடி கொடிகள் இன்னும் பலப்பல

வேகவேகமாகக் கற்கிறோம்.. வேக வேகமாக வளர்கிறோம்.. கற்றது எல்லாம் ஒரு நாள் கைகொடுக்கும் என்றே மகிழ்கிறோம்..

என் ஆசிரியர் எங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் சிறப்பானதை எதிர்பார்க்கிறார். நானும் அவரிடம் கற்கும் பொழுது மிக மிகக் கடுமையாக் உழைக்கிறேன்,, அவரும் கற்பித்தே கொண்டே இருக்கிறார்..

இவர் கற்பிக்க என்றே பிறந்தவரோ என எண்ணம் தோன்றுகிறது. தன்னுடைய வாழ்க்கையே கற்பித்தல்தான் என்னும்படியாய் முழுமனதையும் கற்பித்தலில் செலுத்துகிறார். நான் அவர் சிறந்த ஆசிரியர் என்று சொல்வது அவருக்கு அவ்வளவு ஆனந்தத்தைத் தராது.. ஆனால் அவர் கற்பித்த பாடங்கள் நான் புரிந்து கொண்டதோடு என் மனதில் அந்தப் பாடங்கள் அழிக்கமுடியாமல் பதிந்திருக்கின்றது என்று சொல்வதைக் கேட்டால் எப்படி ஆனந்தமடைவார் என்று தெரியும்.

ஆசிரியர்களுக்கு நம்முடைய வாழ்க்கையை வடிவமைப்பதில் மிக முக்கியக் கடமை இருக்கிறது. கடமை இருக்கும் இடத்தில் தான் புகழும், மகிழ்ச்சியும் இருக்கும். அதனாலேயே ஆசிரியர்கள் அனைவ்ரும் என் ஆசிரியரைப் போல நல்லாசிரியராய் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.

.

No comments:

Post a Comment