Wednesday, December 2, 2009

புதுப் பார்வையில் திருக்குறள் -5

தொழுத கையுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுத கண்ணீரும் அனைத்து. (828)



இது வஞ்சப்புகழ்ச்சியா இருக்கே

தொழுத கை ஒண்ணு நல்லவனுடையதா இருக்கும். அல்லது கெட்டவனுடையதா இருக்கும்.

கெட்டவனுடைய தொழுத கைகளுக்குள் ஆயுதம் மறைந்திருக்கலாம். அதாவது மெய்ப்பொருள் நாயனாரை சிவனடியார் வேடத்தில் வந்து குத்திய வில்லன் மாதிரி (ஹ ஹ மத்தவங்க சொல்லாத இன்னொரு உதாரணம் சொல்லிட்டேனே)

அதே போல அழும் கண்ணீரிலும் சிந்தும் நீலிக் கண்ணீரிலும் விஷம் இருக்கும்..

ஓட்டுக் கேட்க கும்பிட்ட கைகளுடன் வந்து, ஏழைகளின் துன்பத்தை பார்த்து நீலிக் கண்ணீர் விடும் அரசியல்வாதிகள்... பிங்கு வாக்களித்தவரின் முதுகில் குத்தி கண்ணீர் சிந்த வைப்பவர்கள்.

ஆனா இதை இன்னொரு வகையில் பார்க்கலாம்..

நம்மை பணியும் எளிமையானவனாக இருக்கலாம்.. ஆனால் அவனை எதிர்த்து வரும் ஆயுதங்கள் அத்தனையும் கும்பிடும் அந்தக் கைகளுக்கு அடங்கி விடும்..

அஹிம்சை போராட்டம். காந்தியின் அஹிம்சைப் போராட்டங்கள் ஆயுதங்களை வென்றனவே..

கண்ணீர் எளியவர்களின் இயலாமையில் வடிவது. ஆனாலும் அந்தக் கண்ணீருக்கும் கொலைக் கருவிகளை அடக்கும் வலிமை உண்டு.
அதனால தொழுதகையிடம் வன்முறை தோற்கலாம். அழுத கண்ணீரின் முன்னால் ஆயுதம் தோற்றுப் போகலாம்

இப்படி இன்னொரு அர்த்தமும் உள்ளே இருக்கு.


ஆனால் இதை வச்ச இடம் எங்கேன்னு பார்ப்போம்.. கூடா நட்பு என்ற இடத்தில் வச்சிருக்கார்,

இருக்கக் கூடாத நட்பு என்பதால் கூப்பும் கை தவறானவன் கை என்று கொள்ளவேண்டியதாக இருக்கு.

ஓன்னார் என்றால் ஒவ்வாதவர் அதாவது தருமத்தின் வழி நடவாதோர், சரியில்லாதோர் என்று அர்த்தம் பகைவர்கள், எதிரிகள் அல்ல. எதிரிகள் நம் முன்னால் கை கூப்பவோ அழவோ மாட்டாங்க.. துரோகிகள் தான் அப்படிச் செய்வாங்க.. கூடா நட்பு என்னும் இடத்தில் எதிரிகளைப் பற்றிப் பேச வேண்டிய அவசியமில்ல..

அதாவது நல்லோரல்லாதோர் கூப்பிய கைகளிலும் கொலைவாள் மறைந்திருக்கலாம்.. கண்ணீரிலும் விஷம் கலந்திருக்கலாம். அவற்றாலும் நமக்குத் தீமை உண்டாகலாம்..

அத்தக்கையோரின் நட்பினைக் கொள்ளக் கூடாது என்கிறார்...

இன்றைய காலகட்டத்தில நண்பனின் தொழுகையும் அழுகையும் கண்டால் கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருக்கணும்... நல்ல நண்பர்கள் அனாவசியமா இதைச் செய்யறதில்லை

No comments:

Post a Comment