ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
ஏதிலார் என்பதை - அடுத்தவர் என்று சாதாரணமாக அர்த்தப் படுத்திக் கொள்ளுதல் சாதரணப் பொருளைத் தருகிறது.
ஏதிலார் என்றால் எதுவுமே இல்லாதவர்,
1. நமக்கும் அவருக்கும் சம்பந்தமே கிடையாது. அப்படிப்பட்ட பிறர்
2. பதவி, பணம், அந்தஸ்து, பலம், உறவுக்கூட்டம், சிபாரிசு என எந்த பக்கபலமும் இல்லாத ஒரு சாதாரண மனிதர்.. அவரின் தவறுகளை நாம் எப்படித் திறந்த மனதுடன் அணுகுகிறோமோ அப்படி.. விருப்பு வெறுப்பின்றி...
காரணமும் இருக்கிறது. நமது குறைகளை ஆராயும்பொழுது நாம் பல சமாதானங்களை நமக்குள் வைத்துக் கொண்டிருப்போம். அவை சிபாரிசுகளாய் வந்து நம்முடைய பார்வையை மறைக்கும். அந்தச் சமாதான்ங்களை தாண்டிப் பார்க்கவும் செய்ய வேண்டும் என்கிறார் வள்ளுவர்.
No comments:
Post a Comment