சிங்கம் : ரோர்
தாமரை : தனியா வந்திருக்கேன் அது என்ன ரோ. இது சாட் சைட்டு.. ரேசன் கடை இல்லை..
சிங்கம் : பேசு பேசு கடைசியா பேசற என்ன வேணும்னாலும் பேசு
தாமரை : கடைசியாவா? அப்ப எனக்கு முன்னால எல்லோரும் பேசிட்டாங்களா? ஆமாம் எங்க மேடையைக் காணோம்.. மைக்கைக் காணோம்,, கூட்டத்தையும் காணோம் சோடாவையும் காணோம்.. அட்லீஸ்ட் நீ பேசினதக்கு நாலு செருப்பு, அஞ்சாறு அழுகின தக்காளி, முட்டையெல்லாம் விழுந்திருக்கணுமே? யாருகிட்ட காது குத்தறே!
சிங்கம் : நக்கலு! ம்ம்..
தாமரை : அதுசரி டோனியே ஹேர்கட் பண்ணிட்டான் நீ இன்னும் பண்ணாம அடம் பிடிக்கிறியே ஓவராத் தெரியலை?
சிங்கம் : டோனியா?
தாமரை : ரவுசுத் திரி எழுதறவரவர் ரவுசு ராஜா.. புள்ளி வச்சு கோலம் போடறவர் புள்ளி ராஜா நீ எதைக் காட்ட மாட்டேன்னு அடம் பிடிக்கறே காட்டு ராஜா காட்டு ராஜான்னு கேட்கிறாங்க..
சிங்கம் : அது காடு.. ஜங்கிள்.. forest
தாமரை ; அது காடு.. ஜங்கிள்.. forest..ன்னா அப்ப இது வேறயா? இதுவும் காடுதானே..
காடு தமிழ்.. கா என்றால் காப்பாத்து என்று அர்த்தம்.. மழை பொழிய வைத்து பூமியில் இயற்கையை காப்பாத்தி வச்சிருப்பதால் காடுன்னு தமிழன் பேர் வச்சான். அதை இங்கிலீஷ்காரன் மோப்பம் பிடிச்சு.. "காட்" அப்படின்னு ஆண்டவனுக்கே பேரை வச்சான்..காட்ல பொட்டல் காடு, சுடுகாடு, பசுமை மாறாக் காடுகள், மழைக்காடுகள், ஊசி இலைக் காடுகள், ஏற்காடுன்னு பலவகை உண்டு...
ஜங்கிள் ஹிந்தி.. ஜங் என்றால் குதிக்கிற சத்தம் இல்லை போர்க்களம். ஜங் இல்.. அதாவது சண்டையே இல்லாத இடம்.. மனித்ர்கள் வந்து குழப்பம் செய்யாம அவங்கவங்க அவங்கவங்க வேலையைப் பார்த்துகிட்டு அமைதியா இருக்கிற இடம்.
இங்கிலீஷ் காரன் மட்டும் சும்மா வா.. for + rest = Forest. அதாவது காடு என்பது நிம்மதியாய் ஓய்வெடுக்க வேண்டிய இடம்னு சொல்லி இருக்கான், அவ்வளவு அமைதியான இடம். இங்க வந்து திங்கப் போறேன்னு வன்முறையைத் தூண்டி விடறயே.. இது ஞாயமா? இது அடுக்குமா?
சிங்கம் : (முழிக்கிறது)
தாமரை : செல்லக் கடிகள்ல போட இன்னொரு சாட் கிடைச்சாச்சி..
சிங்கம்: மானம் போகிறது விடு ஜூட்...
No comments:
Post a Comment