Wednesday, December 2, 2009

சம்சாரம் அது மின்சாரம்

சம்சாரம் ஒரு
மின்சாரமாம்

உன் அப்பாவைக் கொண்டு பார்த்தால்
நீ
புனல் மின்சாரம்
(தண்ணியிலயே இருக்காரே!)

உன் அம்மாவைக் கொண்டு பார்த்தால்
நீ
அனல் மின்சாரம்
(மனுஷி இப்படியா எரிஞ்சு வழியறது?)

உன் அக்காவைக் கொண்டு பார்த்தால்
நீ
அணு மின்சாரம்
(யப்பா இப்படியா வெடிக்கறது)

உன் அண்ணனைக் கொண்டு பார்த்தால்
நீ
சூரிய மின்சாரம்
(நல்லாவே வெயில்ல காயறான், பொண்ணுங்க பின்னாடி சுத்தி)
உன் தம்பியைக் கொண்டு பார்த்தால்
நீ
காற்று மின்சாரம்
(நல்லாவே சுத்தறான் ஊரையும் ஊரில் உள்ள பெண்கள் பின்னாடியும்)

எதுவாய் இருந்தால் என்ன
என் வீட்டு விளக்கேற்ற வா
மின்சாரமே நீ என்
சம்சாரமாய்...

இவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் உங்கள் மனைவியாக வருகிறவளிடம் மென்மையாக இருக்கிறீர்களே, அங்கேயே நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள். பாராட்டுக்கள்.

பிரச்சனைகளா..

நான் அவங்களுக்கு இப்படியல்லவா சொன்னேன்

உங்கப்பா புனல் - அதான் கருணை வெள்ளம்

உங்கம்மா அனல் - அதான் கற்புக்கரசி

உங்கக்கா அணு - அளவற்ற ஆற்றல் கொண்டவள்

உங்கண்ணன் சூரியன் - ஞானப் பிரகாசம்

உங்க தம்பி காற்று - மிகவும் வேகமானவன்..

ஹி.. ஹி

இந்தக் கவிதைக்கு கருத்துப் பின்னூட்டமிடாமல் ஓவியன் வெளி நடப்பு செய்கிறான்..!!

ஆனா உங்க படத்தைப் பார்த்தால் உள்நடப்பு செய்யற மாதிரி இல்ல இருக்கு...

உள்நடப்பாலே தானே
இந்த வெளிநடப்பே...!!

ஆஹா! அப்பு, வூட்டை விட்டுத் துரத்திட்டாங்களா?

ம்ம்ம் என்ன செய்வது... உங்களுக்கு இந்த உள்ளே வெளியே நுட்பம் தெரியலையே


ஏன், ஏன் ஏனிந்த கொலை வெறி...??
நல்லாத்தானே போயிட்டிருந்திச்சு..!??!!

ஆமாம் உங்க வண்டி நல்லாத்தானே போய்கிட்டு இருந்திச்சு? இப்ப என்ன திடீர்னு நடை??

நீங்க லிஃப்ட் கொடுக்கற விஷயம் வீட்ல தெரிஞ்சு போச்சா?


தண்ணீர்
நெருப்பு
காற்று

அணுவாற்றல்
கதிராற்றல்
காற்றாலைஆற்றல்

அனைத்தும் ஒரே வீட்டில்!
அதுவும், காதலி வீட்டில்

வசதிதான்!
- தமிழ் நம்பி



ஆமாம் ஆமாம்...

அவங்க வீட்டுக்குப் போனா

கண்டிப்பா ஷாக்கடிக்காம இருக்காது..


அல்லிராணீ :

மின்சாரம் தேடும்
உங்கள் இல்லத்தில்
என்னென்ன காத்திருக்கு?

ஒரு ட்யூப் லைட்?
ஒரு குண்டு பல்பு??
ஒரு மிக்ஸி???
ஒரு ரேடியோ????
ஒரு டி.வி?????
ஒரு ஃபிரிட்ஜ்??????
ஒரு காற்றாடி???????
ஒரு வாஷிங் மெஷின்?????????
ஒரு ஏ.சி?????????

இத்தனையும் தானிருக்கோ
இதில் நீரெதுவோ?

சிவா.ஜி:

சில சமயம் முதலாவது(பெரும்பாலும்)
சில சமயம் கடைசி......

அல்லிராணி :

பல சமயம் வாஷிங் மெசின்??

எதுவாய் இருந்தால் தானென்ன?
உன்னால் உயிர்த்தால்
உபயோகமாகும்
இந்த இயந்திரங்கள்
வா!

அல்லிராணி :

ஆமாம் ஆமாம்
இப்போ உயிரென்பீர்கள்
கொடுப்பீர்கள் கேட்பதெல்லாம்

அப்புறமாய்
கேட்பதைக் கொடுக்காவிட்டால்
எடுப்பீர்கள் உயிரை!..

ஆமாம்
என்னை
நீ விட்டால்தான்
உயிரை எடுப்பேன்


நீயோ
விடாமல்
உயிரை எடுக்கிறாய்


ஆதி :

எப்படியாகினும் ஒரு உயிர்
எடுக்கப்பட போவது உறுதி
சரிதானே அண்ணா..

இன்னொரு விஷயமும் இருக்கு..
எடுக்கப்பட்ட போவது நம்ம உயிர்தான்..


நீங்கினால் நாமலே எடுத்துடுரோம்..
நீங்காது இருந்து அவங்க எடுக்குறாங்க ( எதுக்கு நமக்கு சிரமம் தரனும் னு யோசிக்கிறங்களோ )

ஒரு உயிர்
எடுக்கப்படுவதால்தானே
ஈருடல்
ஓருயிராய்!!!

சுகந்தப் பிரீதன் :

அடேங்கப்பா... சம்சாரத்துக்கும் மின்சாரத்துக்கும் இடையில இவ்ளோ சமாச்சாரம் இருக்குதா...?!

ஆமாம் சுகு! அப்பப்ப நீ ரொம்ப அழகு, உன் திறமை யாருக்கு வரும் இப்படி எர்த் ஒயர் போட்டு கிரவுண்டிங் சரியா வச்சிக்கணும்..

ஷாக்கடிக்காம இருக்க


சமுத்ரா செல்வம்:

மின்சாரத்தை சரியான வழியில் பயன்படுத்தினால் வீட்டிற்கு வெளிச்சம் கொடுக்கும்...
இல்லையென்றால் வீட்டில் உள்ளவர்களையே எரிக்கும்..

சம்சாரத்தையும் சரி மின்சாரத்தையும் சரி, நாம கையாள முடியாது..

நம்மால் முடிஞ்சது அப்படி இப்படின்னு திசை திருப்பி விடறதுதான்

மனைவியை பயன்படுத்த முடியாது,


வேணும்னா.. கரப்பான் பூச்சியைக் காட்டி.. பயப்படுத்தலாம்...

No comments:

Post a Comment