Wednesday, December 2, 2009

ரசத்தில் நவரசம்......

கண்ணே!
உன் கைபட்டு
கரைந்ததில்
ஆனந்தமாய்
கண்ணீர் விட்டதோ புளி..
...
...
...
...
ரசத்தில்
உப்பு கொஞ்சம் தூக்கல்தான்

-----------------------------------------------------------------------------

கண்ணே! உன் கைபட்டு ------ காதல்
கரைந்ததில் ------- கருணை
ஆனந்தமாய் கண்ணீர் விட்டதோ புளி..----- மகிழ்ச்சி
...
...
ரசத்தில் உப்பு கொஞ்சம் தூக்கல்தான் -- ஹாஸ்யம் (நகைச்சுவை)

இதை சொல்லும் போது எனக்கு ------ வீரம்
கேட்டவுடன் மனைவிக்கு ------- குழப்பம்

சிறிது நேரம் கழித்து ---- கோபம்
என் மனைவியின் கோபம் கண்டு எனக்கு ------ பயம்
என் மனைவி பாத்திர வீசல் ----- ரௌத்திரம்
கடைசியில் என் நிலை ------- சோகம்....

ரசத்தில் நவ ரசம் ---- நிஜம் தானே......

அல்லிராணி :

குடித்ததே இல்லையென்றீர்
பின்னால்
இப்போ குடிப்பது இல்லையெறீர்
பின்னால்
இனிமே குடிக்க மாட்டேனென்றீர்
இப்போ
கொஞ்சம் கொஞ்சமா
குறைச்சிக்கறேன்
என்கிறீர்

உப்பு அதிகம் போட்டு
என்ன பிரயோஜனம்?
உரைக்கலியே!!!

குடித்ததே இல்லை என்றேன்
உன் கண்களில்
மது உண்டென்று
நானா கண்டேன்?

இப்போ குடிப்பது
இல்லையென்றேன்
உன் கண்ணை
பார்க்கவில்லை
என்று பொய்யா சொன்னேன்?

இனிமே குடிக்க
மாட்டேனென்றேன்
திரும்பப் பார்க்கும் தைரியம்
இல்லை என்றேன்


கொஞ்ச கொஞ்சமாய்
குறைத்துக் கொள்கிறேன்
என்கிறேன்
கண்ணை விலக்க
மனமில்லாமல்

No comments:

Post a Comment