Wednesday, December 2, 2009

ஏவல் நாய்களை ஏவிய கோழைகளே!!!

வெறிபிடித்து
துப்பாக்கிகளாலும் குண்டுகளாலும்
சலைவா வழிய கடித்த
நீங்கள் ஏவிய நாய்கள்
பொந்துகளுக்குள் பதுங்கின..

வெறிநாய் கடித்தாலும்
வெறிபிடிக்காது எங்களுக்கு
காந்தீயத் தடுப்பூசி
கச்சிதமாய் வேலைசெய்யும்..

சோம்பி இருந்த கண்கள்
இனி விழித்தெழும்
அக்கம்பக்கங்களை இனி
அவசியம் நோக்கும்

வெட்டவெளியிலும் நெஞ்சுயர்த்தி நடப்போம்.
அன்பை அறத்தை உயர்த்திப் பிடிப்போம்

சிந்திய ரத்தங்கள் உரமாகும்
இந்தியன் ஒற்றுமை செழித்து வளரும்.
பேதங்கள் கொஞ்சம் பின்னே போகும்
வாதங்கள் இன்னும் பின்னே போகும்
எத்தனை அடி எங்களுக்கு விழுமோ
அத்தனை அடிகள் உயர்ந்து வளர்வோம்..

என்று மரணமென்ற கலக்கமுமில்லை.
எலிகளின் வாழ்க்கை எங்களுக்கில்லை
ஆண்மை என்பது ஆயுதங்களில் இல்லை
வீரம் என்பது வெற்றியில் இல்லை

நாட்டைக் காக்கும் வீரர்கூட்டம்
நாங்களும் காப்போம் முடிந்த மட்டும்

சீரிய நோக்கம் சிந்தனைத் தெளிவு
காரியச் சித்தம் கண்களில் கருணை
நேரிய நன்னடை நெஞ்சினில் தாய்மை
சூரியப் பார்வை செயல்களில் தூய்மை
உங்களில் இருப்பதை உருக்குலைவாக்கும்
எங்களில் இருப்பதே ஆண்மை வீரம்

ஒளியும் வளைகள் இல்லையெனப் போகும்
ஓடுதல் உங்கள் வாழ்க்கையென ஆகும்
புன்னகை மாறா முகங்கள் வாழும்
பூமியில் சமாதானம் பூத்துக் குலுங்கும்

No comments:

Post a Comment