Thursday, December 3, 2009

கீரையாமணம்.

பொன்னாங்கண்ணி
பசலை

முசுமுசுக்கை
தூதுவளை

வல்லாரை
சிறுகீரை
முருங்கை
அறுகீரை

கரிசலாங்கண்ணி
குப்பைமேனி
ஆரை
அகத்திக்கீரை

வெந்தயக்கீரை
மணத்தக்காளி
இறுதியில்
கறிவேப்பிலை

புளிச்சங்கீரை
புதினாக் கீரை


பொன்னிறம் கொண்டவளுக் அழகிய கண்கொண்ட சீதை - பொன்னாங்கண்ணி

பசலை - கணவனைப் பிரிந்ததினால் பிரிவுத்துயரில் பசலை படர்ந்தவளாய் இருந்தாள்.

குரங்காகிய (முசு) கைகளின் மூலமாய் தூதாக வளை(வளையம் - ரிங் - மோதிரம்) வந்தது.

வல்லாரை - அசுரர்களை;

சிறுகீரை - எளியவர்களான வானரங்கள் மற்றும் ராம லட்சுமணர்கள்

முருங்கை - தம்முடைய அழகிய கைகளினால்

அறுகீரை
- அழித்தார்கள்..

கரிசலாங்கண்ணி - கரிய நிறமும் அழகிய கண்ணும் கொண்ட ராமன்,

குப்பைமேனி - மக்கள் மனதில் எழக்கூடிய சந்தேகங்கள் என்னும் குப்பைகளை எண்ணி,

ஆரை - ஆரணங்கை

அகத்திக்கீரை - உளச்சுத்தி காட்ட உடலைத் தீக்கிரையாகச் சொன்னான்.

வெந்தயக்கீரை - வெந்த தங்கம் - புடம் போட்ட தங்கம் போட்ட வெளிப்பட்ட அவள் ,

மணத்தக்காளி - புகழாகிய நறுமணத்தை தக்க வைத்துக் கொண்டவளானாள்.

கறிவேப்பிலை - இறுதியில் அவள் கறிவேப்பிலையாய் வெறும் மணப் பொருளாய் மட்டுமே மாறிப்போனாள்.. ஓருரிமையும் இல்லாமல் போயிற்றவளுக்கு.,

புளிச்சங் கீரை - இது சொல்லிச் சொல்லிப் புளித்துப் போன கதை

புதினாக்கீரை - இன்னும் ஒரு புதிய வடிவில்

7 comments:

  1. வித்தியாசமா பண்ணி இருக்கீங்க..
    நல்ல முயற்சி...
    நல்லா வந்திருக்கு...

    ReplyDelete
  2. மிகவும் நன்றி கமலேஷ்!!!

    ReplyDelete
  3. நிஜமாவே வித்தியாசமாத்தான் இருக்கு தாமரைச்செல்வன்.

    ReplyDelete
  4. கம்பராமாயணம் கேட்டிருக்கிறேன்.உங்கள் கீரையாமணம் புதுமையாகவும், எளிமையாகவும் இருக்கிறது. கம்ப ரசத்தை போல் உங்கள் கீரை ரசமும் சூப்பர். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. நல்லா இருக்கு கீராமாயணம்

    ReplyDelete
  6. இவ்ளோ கீரை வகைகள் உண்டோ, நல்ல கவிதை நண்பரே

    ReplyDelete
  7. இது நான் கண்டறிந்த புதிய கவிதை வகையாகும். Abstract என்ற வகை ஓவியத்தில் கண் காது மூக்கு வாய் எனத் தனியே வரைந்து விட்டிருப்பார்கள். நம் கற்பனையால் அவற்றை இணைக்க ஒரு கருத்து தோன்றும். அதே போல் இதை ஒரு வேலைக்காரியிடம் கொடுத்தால் மார்க்கெட்டுக்குப் போய் கீரைகளாக வாங்கி வந்து விடுவாள். ஆனால் ஒரு தமிழறிஞன் அதில் இராமாயணம் காணலாம்.

    இந்த வகைக் கவிதைகள் ஒரு முறை புரிந்து விட்டால் மனதில் நின்று விடும்..

    ReplyDelete