Tuesday, December 1, 2009

பாசுபதாஸ்திரம்

அர்ஜுனன் தவம் செய்து பாசுபதாஸ்திரம் பெற்ற கதை நம் எல்லோருக்கும் தெரியும். அதை அர்ஜுனன் எப்போது, எதற்காக உபயோகித்தான் எனத் தெரியுமா?

சில அஸ்திரங்களை குண்டக்க மண்டக்க விடக்கூடாது. பிரம்மாஸ்திரமும் பாசுபதாஸ்திரமும் அப்படித்தான். ரெண்டையும் போட்டா......அழிவு நிச்சயம். அதுவும் பேரழிவு. இது தெரிஞ்சவங்க கொஞ்சப் பேருதான். பீஷ்மர், துரோணர், அஸ்வத்தாமன், அர்ச்சுனன், கர்ணன்.....அத்தோட பட்டியல் முடியுது. கண்ணனுக்குத் தெரியும். ஆனா அவந்தான் சண்டைல இல்லையே.

பீஷ்மர் பிரம்மாஸ்திரம் போடக் கூடாதுன்னு இருந்தாரு. போட்டா அது அந்தப் பக்கம் லபக்கீரும்னு தெரியும். அதே கதைதான் துரோணருக்கும். ஆனா அர்ச்சுனனும் கர்ணனும் பயன்படுத்தலை. ஏன்னா அதைப் போட்டா என்னாகும்னு அவங்களுக்கு நல்லா தெரியும். ஆனா கர்ணன் பயன்படுத்தியிருந்திருக்கலாம். ஆனால் இல்லை. ஏன்னா...தேவையான நேரத்துல மந்திரம் மறந்து போகனுமுன்னு பரசுராமர் ஆசீர்வாதம் பண்ணீருக்காரு.

ஆனா அஸ்வத்தாமன் போட்டுட்டாய்யா....துரியோதனனைத் தொடைல அடிச்சு கொன்னுட்டாங்கன்னு தெரிஞ்சதுமே பிரம்மாஸ்திரத்தைப் போட்டுர்ரான். ஆனா அப்பயும் கிருஷ்ணர் உள்ள புகுந்து பாண்டவர்கள் அஞ்சு பேர மட்டும் காப்பாத்தீர்ராரு. அதுவுமில்லாம தூங்கிக்கிட்டு இருந்தவங்களக் கொன்னதுக்கும் பிரம்மாஸ்திரம் போட்டதுக்கும் தண்டனையா அஸ்வத்தாமனோட சிரோன்மணியப் பிடுங்கி அவமானப் படுத்தீர்ராங்க வேற. அவனுக்கு இறப்பே கிடையாது. இன்னமும் எங்கேயாவது ஒழிஞ்சி திரிஞ்சி வாழ்றானாம்.

மொத்தத்துல பாசுபதாஸ்திரத்தை அர்ச்சுனன் பயன்படுத்தலை. நம்ம கிட்டயும் அனுகுண்டு இருந்தது. கார்கில்ல போடலைல்ல. இருக்குன்னு சொல்லி மெரட்டத்தான் பாசுபதாஸ்திரமெல்லாம். ஆனா சண்டைன்னு வரும் போது பாத்துதான் போடுவாங்க. இல்லைன்னா ஏன் போட்டேன்னு கேக்க அப்பவே ஆளுங்க வந்துருவாங்க

பிரம்மாஸ்திரம்.. அஸ்வத்தாமன் இளம்பஞ்ச பாண்டவர்களை கொன்றதும் ஓடிப் பதுங்க.. அர்ச்சுனனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் சண்டை வர அஸ்வத்தாமன் ஏவி விட, அர்ச்சுனனும் ஏவுகிறான்.


பிரம்மாஸ்திரங்கள் எதிரெதிராய் ஏவப்பட்டதால் "குளோபல் வார்மிங்" ஏற்பட்டு பிரளயம் ஏற்பட்டு விடும் என்பதால் பெரியோர்கள் கேட்டுக்கொள்வதன் மூலம் அர்ச்சுனன் பிரம்மாஸ்திரத்தை திரும்பப் பெருகிறான்.. ஆனால் அஸ்வத்தாமனோ பாண்டவ வம்சத்தை பூண்டோட அறுக்கச் சொல்ல கிருஷ்ணன் அபிமன்யுவின் மனைவி உத்தரையின் வயிற்றிலுள்ள் ப்ரீட்சித்தை மட்டும் காப்பாற்றி விடுகிறார். அஸ்வத்தாமனுக்கு தண்டனை தரப்படுகிறது..

மும்மூர்த்திகளில் பிரம்மாஸ்திர கதை இப்படி இருக்க, நாராயணாஸ்திரமும் ஒருமுறை ஏவப்படுகிறது...(பீஷ்மரால் என நினைக்கிறேன்) அதை கிருஷ்ணன், அர்ச்சுனனை நிராயுதபாணியாக இருக்கச் சொல்லி, தன் மார்பில் ஏற்கிறார்..

ஆனால் சிவனிடம் இருந்து பெற்ற அஸ்திரத்தைப் பற்றி எதுவுமே சொல்லப்படவில்லை.. அது சொல்ல மறந்த கதை...
ஆமாமா...சரிதான். அர்ச்சுனன் வேற வழியில்லாம ஏவுறான். ஆனா திரும்ப வாங்கிக்கிர்ரான். ஆனா அஸ்வத்தாமன் வாங்கலை. அதுனாலதான் பாண்டவர்களுக்கும் எல்லாம் நட்டம். அஞ்சு பேரையும் பரிக்ஷித்தையும் தவிர. எல்லாரும் சொன்ன பேச்சு கேக்காததால அஸ்வத்தாமன அசிங்கப்படுத்தி தொரத்தி விட்டுர்ராங்க. நாராயணாஸ்திரத்தைப் பீஷ்மர் போட்டாரான்னு தெரியலை. சரி பாக்கனும். பாசுபதாஸ்திரம் கடைசி வரைக்கும் பயன்படவேயில்லை.

இன்னும் நாலு பேரு பார்த்து சொல்லட்டும்.. இன்னொரு விஷயம் என்னன்னா, அர்ச்சுனன் யாரையாவது ஒரு பெரிய ஆளை அஸ்திரம் போட்டு அழிச்சு இருக்கானா?????
அர்ச்சுனர் போட்டுத்தள்ளுன முக்கிய (ஏன் முக்குனாங்க?) ஆட்கள் பீஷ்மரு, கர்ணரு, .....வேற யாரு இருக்கா? காட்டுக்குள்ள போனப்ப எல்லாம் பீமந்தான் சண்டை போட்டான். போருல துண்டு துக்கடாக்களளயெல்லாம் போட்டுத் தள்ளுனான். வேற என்ன செஞ்சான். திரும்ப ஆட்சிக்கு வந்தப்புறம் துவாரகை கடல்ல மூழ்குறப்போ, அங்கிருந்து மக்களக் கூட்டீட்டு வரும் போது திருட்டுப் பசங்க கிட்ட அடி வாங்கி...தப்பிச்சோம் பிழைச்சோம்னு வந்தான்....
ஆனா அவங்களை கூட ஒரு அஸ்திரம் உபயோகம் செய்து கொல்லலையே.. தந்திரம் உபயோகம் பண்ணித்தானே??
ஆமாம். ஆமாம்...எனக்கென்னவோ இந்த அர்ச்சுனன் பொய் சொல்லீருப்பானோன்னு டவுட்டு. எங்கிட்ட அந்த அஸ்திரம் இருக்கு. இந்த அஸ்திரம் இருக்குன்னு......

அதாவது பதினெட்டு அத்தியாயமா பகவான் சொல்லியும்..அவன் உருப்படியா யாரையும் கொல்லலை.. அப்படீங்கறீங்க...

தெய்வீக அஸ்த்திரங்கள் பெற்றுவைப்பது அதை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல. எதிரி எய்யும் பாணத்தை முதலில் முறிக்க வேண்டும். அதன் பின்னர் அவனை கொலை செய்யவேண்டுமாகில் அவனால் பிரயோகிக்க முடியாத சக்திவாய்ந்த பாணத்தை அவன்மீது ஏவ வேண்டும். இதுதான் போர்நீதி.


அந்த வகையில் அர்ச்ஜுணன் பல தெய்வீக அஸ்த்திரங்களை பெறுகிறான். அதில் பாசுபதாஸ்த்திரமும் ஒன்று. அதை பிரயோகிக்க தருணம் அவனுக்கு கிடைக்கவில்லை.


பீஷ்மரை கொன்றே ஆகவேண்டும் என்ற நிலை வந்தபோதும், ஜெயத்ரதனை கொன்றே தீர வேண்டும் என முடிவெடுத்த போதும், துரோணர் ஊழிப் பெருங்கூத்து ஆடிய போதும், கர்ணனின் பாணங்கள் அவனைத் துளைத்த போதும் ஏவவில்லையே.,.


நீங்கள் சொன்ன போர் நீதிப்படிப் பார்த்தால் அஸ்திரங்களை யாரும் பிரயோகிக்கக் கூடாது.. அப்படி இருக்க போர் நீதி வழுவா பீஷ்மர் ஏன் நாராயண அஸ்திரத்தை அர்ச்சுனன் மேல் ஏவினார்?

ஒருவனை எதிர்க்க முடியா அளவிற்கு மடக்கிய பிறகு அஸ்திரம் விட்டுத்தான் கொல்ல வேண்டுமா? அர்ச்சுனன் பெரிய ஆட்கள் யாரையுமே சாய்க்கவில்லை என்று அறிந்துமா இந்த பதில்?

கண்ணனுக்கு அர்ச்சுணன் மேல் நம்பிக்கை இல்லாமலா பாசுபதாஸ்திரம் பெற்று வரச் சொன்னார்? இல்லை வருவதை அறியாமலா?

தன் குலத்தையே அழிக்க முயன்ற அஸ்வத்தாமன் மீதும் பாசுபதாஸ்திரம் ஏவப்பட வில்லையே!!!


என்னைத்தெளிவாக குழப்பியிருக்கிறீர்கள்.


1. அவ்வேளைகளிலெல்லாம் தெய்வீக அஸ்த்திரங்களை பிரயோகிக்க வேண்டிய கட்டாயம் தேவைப்படவில்லை. அவற்றை பாவிக்கும் தருணத்தை பற்றி கண்ணனே ஓரிடத்தில் தெளிவாக கூறியிருக்கிறார். அதை கூடியவிரைவில் இங்கே பதிக்கிறேன்.

2. நாராயண அஸ்த்திரத்தின் கதை எனக்கு தெரியாது. தயவுகூர்ந்து எனக்கு அறியத்தரமுடியுமா?

3. அர்ச்சுணன் சாய்க்கவில்லை என்பதைவிட அவனிடமிருந்ததை விட அவன் பிரயோகித்திருக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணுபவருடம் சக்திவாய்ந்து அஸ்த்திரம் இருந்தது. ஆர்ஜுணன் தெய்வீக அஸ்த்திரத்தை பாவித்திருந்தால் அவன் அடுத்த நொடி மாண்டிருப்பான். ஏனெனில் எதிரியின் அஸ்த்திரத்தின் வலிமை.

4. கண்ணன் சொன்னதால் கட்டாயம் பாவித்துத்தான் இருக்க வேண்டும் என்னும் உங்கள் வாதம் சற்று வியப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் என்ன செய்ய? எடுப்பவை எல்லாம் கட்டாயம் பயன்படுத்தவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

5. இது தர்ம யுத்தமே தவிர குலத்திற்கான யுத்தம் இல்லை

தெளிந்த நீர் தெளியாது.. குழம்பிய நீர் தான் தெளியும்..
ஒன்பதாவது நாள் என நினைக்கிறேன்.. பீஷ்மரும் அர்ச்சுனனும் உக்கிரமாய் போர் புரிந்து கொண்டிருக்க.. பீஷ்மர் நாராயண அஸ்திரத்தை பிரயோகிக்கிறார்.. கண்ணன் ஒருவனுக்கு மட்டுமே அந்த அஸ்திரத்தைப் பற்றி தெரியும்.. அந்த அஸ்திரம் எதிர்ப்போரை அழித்து விடும். சரணடைவோரை ஒன்றும் செய்யாது..கண்ணன் அர்ச்சுணனிடம் இது நாராயண அஸ்திரம் இதை வணங்கு எனச் சொல்ல.. கையில் இருந்த அனைத்து ஆயுதங்களையும் தவற விட்டு அர்ச்சுணன் அதை வணங்குகிறான்.. அதே சமயம் கையில் சாட்டையுடன் இருந்ததால் அஸ்திரம் கண்ணன் மார்பில் பாய்கிறது.. அவருடன் கலந்து விடுகிறது..
அர்ச்சுணன் சோர்ந்து விடுகிறான்.. கண்ணன் எவ்வளவோ சொல்லியும் போர்புரிய மறுக்க, கையில் சுதர்சனத்துடன், நீ அழிக்கா விட்டால் நான் என் சத்தியத்தை உடைத்து ஆயுதமேந்தி பீஷ்மரை அழிப்பேன் என் தேரை விட்டிறங்க.. பீஷ்மர் நகைக்க அர்ச்சுனன் காண்டீபம் கையிலெடுத்து மீண்டும் போர் புரியத்தொடங்குகிறான்....
பாசுபதாஸ்திரத்தின் வலிமை என்ன என்பதே விளக்கப் படவில்லை. நாகாஸ்திரம் போல பலமுறை ஏவப்படக் கூடியதா இல்லை இந்திரன் அளித்த சக்தி ஆயுதம் போல் யூஸ் அண்ட் த்ரோவா? பிரம்மாஸ்திரம் பல முறை பிரயோகிக்கப் படலாம்.
அர்ச்சுணன் குறைந்த பட்சம் மும்முறை மகாபாரதப் போரிலே சாவின் விளிம்பிற்குச் சென்று வருகிறான்..
1. பீஷ்மர் நாராயண அஸ்திரம் எய்த பொழுது..
2. ஜெயத்ரதனை அணுக இயலாமல் சூரியன் மறையும் தருணம்
3. கர்ணனால் நாகாஸ்திரம் பிரயோகிக்கப் பட்ட போது..
தர்ம யுத்தத்தில் அபிமன்யூ இறந்தவுடன் கடமைகளை மறந்து மகனைக் கொன்றவனை மாய்ப்பேன் இல்லையெனில் தீப்புகுவேன் என்று சொல்லிக் கலங்கிய அர்ச்சுணன் தன் குலமனைத்தும், தன் பிறந்த பிறவா வாரிசுகளனைத்தும் அழிந்த பின்னும் ஏன் அந்த உணர்ச்சியினைப் பெறவில்லை..
தர்மன் முதல் நான்கு நாட்களில் மாண்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்? தர்ம யுத்தம் தொடர்ந்திருக்குமா? தொடராவிட்டால் அது தர்ம யுத்தமா இல்லை தர்மனின் யுத்தமா?
சக்கர வியூகத்தில் இருந்து தர்மனைக் காக்கத்தான் அபிமன்யூ மாண்டான்.. அஸ்வத்தாமனோ துரியோதனன் சாய்ந்த பின்னும் போர்புரிகிறான் (??) அல்லது கொலை செய்கிறான்..
போர்தொடுத்தவர்கள் பாண்டவர்கள்.. அப்படியிருக்க முதலம்பு எய்யும் உரிமை பாண்டவர்களுக்கே உரியது.. நீங்க முதல்ல இல்ல இல்ல நீங்க முதல்ல என்று சொல்லிக் கொண்டே இருந்தால்.. அது போர் அல்ல.. Bore.
பாசுபதாஸ்திரத்தை அர்ச்சுணன் பயன்படுத்தி இருந்தால் அதை முறிக்காமல் அடுத்த அஸ்திரம் எய்யப் போவது யார்?
அதுதான் கண்ணன் இருக்கிறாரே.. தேரை இறக்கி குலுக்கி அவனைக் காப்பாற்ற.. 
அர்ச்சுணனை கொல்ல கர்ணன் வைத்திருந்தது நாகாஸ்திரம் மற்றும் இந்திரன் அளித்த சக்தி ஆயுதம்..
சக்தி ஆயுதம் கடோத்கஜன் மீது 14 -ம் நாள் பிரயோகிக்கப் பட்டது..நாகாஸ்திரமோ 17 - ம் நாள்.
கண்ணன் சொன்னதை மட்டுமே அர்ச்சுணன் செய்தான்.. கண்ணன் அனைத்தும் அறிந்தவன் அப்படி இருக்க.. பாசுபதாஸ்திரம் ஏன்?
 கிருண்ணர் சக்கரத்துடன் எழுந்தோடுவது அர்ச்சுணன் பீஷ்மருடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கையில்த்தான். அதாவது, பீஷ்மர் விடும் பாணம் ஒன்று கிருஸ்ணரைத்தாக்க அதற்கு பதிலாக பீஷமரின் சாரதியையே கொய்கிறான் அர்ஜுணன். அந்தத்தருணத்தில்த்தான் கிருஸ்ணர் சக்கரத்துடன் பீஷ்மரை நோக்கி ஓட அர்ச்ஜுணன் பின்னால் ஓடிச் சென்று அவரை தடுக்கிறார். அந்த வேளை " எனது வேண்டுகோலிற்காக ஆயுதமேந்த மாட்டேன் என்று சொன்ன நீரே ஆயுதமேந்திவிட்டீரே. அதனாலேயே என்னை வதஞ்செய்து எனது இறப்பிலும் பெருமை சேர்த்துவிடும் கிருண்ணரே" என்று சொல்லி ஆனந்தக்கண்ணீர் மல்க வேண்டுகிறார் பீஷ்மர்.


ஆனால் இன்றுதான் தெரியும் கிருஸ்ணரை பதம் பார்த்தது நாராயண அஸ்த்திரம் என்று....

மீள ஒரு தடவை புத்தகத்தை புரட்டவேண்டிய கட்டாயம் எனக்கு வந்துவிட்டது. புரட்டவேண்டிய இடத்தை துல்லியமாக தந்தமைக்கு மிக்க நன்றி.

முக்கிய குறிப்பு: கண்ணன் பாண்டவர் பக்கம் இருப்பதற்கான காரணம், அவர்கள் கண்ணன் மீது கொண்ட பக்தியாலோ அல்லது அர்ஜுணன் நண்பன் என்பதற்காகவோ அல்லது தங்கை பாஞ்சாலியை மணமுடித்ததற்காகவோ இல்லை. அவர்கள் பக்கம் தர்மம் காக்கப்படுகின்றது என்பதற்காகவே. அப்படியிருக்கையில், போரின்போது போர் நீதி தர்மங்களை மீற கண்ணன் இணங்கப்போவதில்லை. அதேவேளை தர்மவழி நடப்போரை காப்பாற்றாதும் விடப்போவதில்லை.

ராகவரும் பிரதீப்பும் இல்லையே.. இந்தக் வரிகள் அவர்களின் கண்களில் படவில்லையே என வருத்தமாக இருக்கிறது..
போரின் விதிப்படி ஒருவர் ஒருவருடன் தான் மோத வேண்டும். கௌரவ சேனை 11 அக்குரோணி... பாண்டவர் சேனையோ 5 அக்குரோணி.. அப்படியெனில் முதல் நாள் 6 அக்குரோணி சேனைகள் வேடிக்கைப் பார்த்தனவா?

கடோத்கஜன், அபிமன்யூ, இளம்பஞ்சபாண்டவர்கள், விகர்ணன், விராட மன்னனின் மகன் உத்திரன் என எத்தனையோ பேர் இறந்தனரே அவர்கள் தர்மம் தவறியதால்தான் கண்ணன் கைவிட்டாரோ?
 ஏங்க இப்படி சிந்திக்கிறீர்கள்.


போரிற்கு முன்னர் அயல் நாட்டரசர்களுடன் நட்புறவு வைத்துக்கொண்டு அவர்கள் உதவியை பெற்றுக்கொள்வது தெரியாதா.

அந்த வகையில்த்தான் சல்லியன் பாண்டவரை சந்திக்க வரும்போது இடையில் துரியோதனன் அவர்களிற்கு தாக சாந்தி அளித்து அவரது உதவியை பெறுகிறாரன். இது ஒரு உதாரணம் மற்றய நாட்டரசர்களை தன் பக்கம் ஈர்த்துக்கொள்வதற்கு.

ஆக பாண்டவர்கள் ஐவர் மட்டுந்தான் கௌரவருடன் சண்டை இட்டதென்றில்லை.


 
பாண்டவர்கள் ஐவர் மட்டும்தான் போரிட்டனர் என்று எப்பொழுது சொன்னேன் நினைவில்லையே!...


அவர் யுத்த தர்மங்கள் என்று அஸ்திரம் எதிரஸ்திரம் என்று சொன்னதற்காக சொல்லப்பட்டது ...

நேற்று என்னுடன் பணிபுரியும் ஒருவர் "கோபத்தைக் கட்டுப்படுத்தும் வழிகள்" பற்றி என்னிடம் விவாதித்துக் கொண்டிருந்தார். நியாயங்களை மற்றவர் மறுக்கும் பொழுது கோபம் வருவதாகவும், அதனால் சண்டை ஏற்படுவதாகவும் சொல்ல அவருக்கு அறிவுரை சொல்ல்ப் போனபோது நான் உணர்ந்தது இது.
ஒருவர் தவறு செய்து விட்டார் என்பதற்காக சண்டைக்குப் போவது மிகத் தவறு. மகாபாரதத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். தர்மம் தவறாமல் இருந்த தர்மன் கூட சண்டை என்றபொழுது பொய் சொல்ல நேரிட்டது. ஆக கோபத்தின் வசப்பட்டு சண்டைக்குச் சென்றால் எத்தனைப் பெரிய தர்மவானாக இருந்தாலும் தவறு செய்ய வேண்டியதிருக்கும் என்பதையே மகாபாரதப் போர் உணர்த்துகிறது. அப்படி நடக்கும் பட்சத்தில் கடவுளால் கூட ஏற்படும் இழப்புகளைத் தடுக்க முடியாது என்பதையே பாண்டவர்களின் இழப்பு காட்டுகிறது.எனவே என்னதான் நமது கோபம் நியாயம் என்றாலும் சண்டை என்று வரும்பொழுது கண்டிப்பாய் தவறு செய்பவர்களாகி விடுவோம். எனவே கோபத்தை குறைத்துக் கொள்ளல் தான் சரியே தவிர, சண்டை இடுவது மிகத் தவறு. கோபப்படாமல் அல்லது கோபம் குறையும் வரைக் காத்திருந்து யோசித்தால் ஒரு வழி அல்ல சில வேறு வழிகள் அந்த தவறை சரி செய்ய தோன்றும்.அடிப்படையில் ஒன்று மட்டும் நமது அடிப்படையாய்க் கொள்ளவேன்டும். எந்த சராசரி மனிதனும் கொடுமை செய்யவேண்டும் மற்ரவரை அழவைத்தே ஆகவேண்டும் என்று கெடுமதியுடன் தவறுகல் புரிவதில்லை. அவரவர் செய்யும் செயல்களுக்கு அவரவர் ஒரு நியாயம் வைத்திருக்கின்றனர். ஒன்று அவரின் பார்வை தவறாய் இருத்தல் வேண்டும் அல்லது அவரது நமது பார்வை தவறாய் இருத்தல் வேண்டும். எனவே முதலில் அவர் எந்தக் கோணத்தில் இந்தப் பிரச்சனையை அணுகுகிறார் என்று அறிய வேண்டும். அதே கோணத்தை நம்மால் பார்க்க இயன்றால் என்ன பிரச்சனை என்று புரிந்து விடும்..

இதை இங்கே எழுதினால் பொருத்தமாய் இருக்கும் என்று எழுதி இருக்கிறேன்
 

4 comments:

 1. ஜெயத்ரதன் தலையை அவன் தந்தை மடிமீது வீழ்த்துவதற்கு அர்ச்சுனன் பாசுபதாஸ்திரத்தையே பிரயோகித்தான்

  ReplyDelete
  Replies
  1. இல்லை, அதற்கான அஸ்திரத்தை சிவபெருமாளிடம் அபிமன்யூ இறந்த அன்று கண்ணனும் அர்ஜூனனும் கைலாயம் சென்று பெற்றார்கள். அன்றுதான் அர்ஜூனன் கைலாயம் செல்லும் வழியில் பசியால் துன்பம் அடைகிறான். பசிக்கிறது ஆனால் சாப்பிய ஒப்புக் கொள்ளவில்லை. ஏன் என்று கேட்டால் சிவபூஜை செய்து விட்டுதான் சாப்பிடுவதாக வழக்கம். ஆனால் தான் பூஜிக்கும் லிங்கத்தை கூடாரத்திலேயே விட்டுவிட்டு வந்ததாகச் சொல்கிறான். அந்த சமயத்தில் தன்னையே சிவனாகக் கருதி பூஜிக்கும்படி கண்ணன் சொல்ல அரைமனதோடு பூஜை முடிக்கிறான் அர்ஜூனன்.

   பின்னர் சிவனைக் காணும்பொழுது அர்ஜூனன் தான் பூஜித்த மலர்கள் சிவனின் மேல் இருப்பதைக் கண்டு அதிசயிக்கிறான்...

   அந்த அஸ்திரம் கொண்டுதான் ஜெயத்ரதனைக் கொல்கிறான். சுகிசிவம் தனது வியாச பாரத விளக்கத்திலேயே இதைச் சொல்லி இருக்கிறார்.

   Delete
  2. http://en.wikipedia.org/wiki/Pashupatastra

   n the Mahabharata Arjuna obtained this weapon from Lord Shiva but did not use it because this weapon would destroy the entire world, if used against a mortal enemy. Arjun didn't used this astra to slay Jayadaratha.

   Delete