Tuesday, December 1, 2009

பாழாப் போன உலகமே!


பாழாப் போன உலகமே! - இது
பணமிருந்தாக்கா பாதத்தில் கிடக்கும்
பாழாப் போன உலகமே.


நாளாப் பொழுதா இரத்தத்தை கொடுத்து
உழைச்சிடுவான் அவன் பாட்டாளி - அதை
நாலாப் பிரிச்சி தேரா வடிச்சி
நரம்பினைக் கொண்டு வடங்கட்டி - மனித
நரம்பினைக் கொண்டு வடங்கட்டி

உல்லாசம் கொள்வார் ஊர்கோலம் போவார்
உன்மத்த சிரிப்பு சிரிப்பார் - சிலர்
உன்மத்த சிரிப்பு சிரிப்பார்.

பாழாப் போன உலகமே


கல்லுல செஞ்ச சிலைக்கு வைரக்
கல்லுல மாலை போட்டிடுவார் - அந்தக்
கல்லுல சிலையை செதுக்கிய பேர்கள்
கட்டாந்தரையிலே படுத்திடுவார் - அங்கு
கட்டெறும்பு கடித்திட துடித்திடுவார்

பொன்னும் மணியும் கண்ணைச் சிமிட்டி
ஊர்கோலம் போகும் அங்கே - பல
உயிர் போகும் பட்டினியில் இங்கே!


பாழாப் போன உலகமே


ஆகாரம் இல்லாம ஆயிரம் வயிறு
பட்டினியால் தினம் துடிக்கும் - இங்கு
அடிக்கடி தின்று உப்பிய வயிறு
ஜீரணிக்க முடியாம தவிக்கும் - அது
ஜிஞ்ஜர் சோடாவைக் குடிக்கும்

பாலும் தேனும் பாதாம் கீரும்
ஆறாய் போகும் அங்கே - - பல
உயிர் போகும் பட்டினியில் இங்கே!


பாழாப் போன உலகமே

.

No comments:

Post a Comment