Tuesday, December 1, 2009

தனக்கு மிஞ்சியதுதான் தானமும் தர்மமும்....

தனக்கு மிஞ்சியதுதான் தானமும் தர்மமும் என்பார்கள்.

நம் எல்லோருக்கும் தெரிந்த பழமொழி இது. இதன் அர்த்தம் பல இடங்களில் அனர்த்தமாகத்தான் உபயோகப்படுத்தப்படுகிறது.

தனக்கேனப் பொருளைச் சேர்த்துக் கொள். பிறகு மற்றவரைப் பார்க்கலாம் என்கின்றனர் சிலர்..

வெள்ள நிவாரணம், பூகம்ப் நிவாரணம் என வசூல் செய்து, தனக்கு வேண்டிய அளவு எடுத்துக் கொண்டு மிஞ்சியதைத் தானம் செய்வர் சிலர்.

எல்லோருக்குமே இது ஒருவகையில் பழகி விட்டது. ஆனால் இதன் உண்மையானப் பொருள்தான் என்ன?

நம்மிடம் இருப்பது எல்லாமே நம்முடையது அல்ல. நாம் நம் உழைப்பினால் ஈட்டியது கூட முழுமையாய் நமக்கு சொந்தமானது அல்ல.

நமக்கென பல கடமைகள் உள்ளன. நம்மைச் சார்ந்தவர்கள் பலர் இருக்கின்றனர். மனைவி, மக்கள், உறவினர் எனப் பலர் இருக்கிறனர். அவர்களின் நலம் பேணுதல் முதற்கடமை.

சமுதாயமும் நமக்கு ஒரு கடமை.. நம் வருமானத்தில் ஒரு பங்கை.. வரிமூலம் இதற்குச் செலவளிக்கிறோம்.

இப்படி நமக்கென இருக்கும் கடமைகளைச் செய்த பின்னர்.. நமக்கென சிறிது எஞ்சி நிற்கும். அதுதான் தனக்கு மிஞ்சியது. அதைத்தான் கொடுக்க வேண்டும். பிறர் செல்வத்தை அல்ல.

அந்தத் தானம்தான் தர்மம்.

தனக்கு மிஞ்சியதையே தானம். அதுவே தர்மம்.

No comments:

Post a Comment