Tuesday, December 1, 2009

ஆரோக்கிய உணவு !



ஒரு கோப்பை அரிசியை களைந்து, கல் குருணை நீக்கி நீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

அடுப்பில் குக்கரை வைத்து, ஒன்றரைக் கப்பிற்கும் சற்றே அதிகமாக தண்ணீர் விட்டு ஊற வைத்த அரிசியை இட்டு அடுப்பை மத்திமமாக எரிய விட்டு, குக்கரை மூடி குக்கரின் வெயிட்டைப் பொறுத்தவும்.

முதல் விசில் வந்தவுடன் அடுப்பை சன்னமாக வைக்கவும்.

இரண்டாம் விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து நீராவி அழுத்தம் முற்றிலும் குறையும் வரை காத்திருக்கவும்.

இந்த வெந்த சாதத்தை நன்கு ஆற வைக்கவும்..

சாதம் ஆறியவுடன் சாதத்திற்கு ஒண்ணரை மடங்கு தண்ணீர் ஊற்றி, 8 மணி நேரம் ஊறவைக்கவும்.

இவையெல்லாம் இரவில் செய்தால் நல்லது.

விடியற்காலையில் சாதத்திலிருக்கும் தண்ணீரை வடித்து சிறிது மோர், மற்றும் தேவையான அளவு உப்பு கலந்து கொள்ளவும்.

மணம் தேவையெனில் சிறிது கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை இலைகளை கழுவி துண்டாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம்.

சிறிய வெங்காயம் ஒன்றை தோலுரித்து எடுத்துக் கொண்டு, இந்த ஜூஸை வெங்காயத்தை சுவைத்தவாறே சாப்பிட...

இது உடலை மிக மிக ஆரோக்கியமாக் வைத்துக் கொள்ள உதவும் உணவாகும்.
.

No comments:

Post a Comment