Wednesday, December 2, 2009

புதுப் பார்வையில் திருக்குறள் -1

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்



தீமை இலாத சொலல்.
 
 
வாய்மைக்கும் உண்மைக்கும் உள்ள நுண்ணிய வித்தியாசம் இந்தக் குறளில் காணக் கிடைக்கிறது..


பேசப்படாத சொல்லுக்கும் - வாய்மைக்கும் சம்பந்தம் கிடையாது.

உள்ளத்தைச் சார்ந்தது உண்மை.. வாயைச் சார்ந்தது வாய்மை...

அதனால்தான் சொலல் என்ற செயலைச் சுட்டிக் காட்டுகிறார் வள்ளுவர்.

மை விகுதிப் பெற்றவை பண்புகள். செம்மை, செழுமை, பசுமை, வெண்மை, பெருமை, பொறுமை என பண்புகள் காட்டுவது மை விகுதி..

வாய் மை எனப்படுவது வாயின் பண்பாகும்..

வாயின் தொழில் பேசுதல்.. அதன் பண்பு எந்தத் தீங்கும் இல்லாதவற்றைப் பேசுதல்.

ஒரு வார்த்தையால் கலவரம் மூளலாம்.. ஒரு வார்த்தையால் உயிர்கள் போகலாம், ஒரு வார்த்தையால் ஒரு மனம் புண்படலாம்..

யாருடைய மனமும் புண்படாமல் பேச முடியுமா? முடியும். அளவாகத் தெளிந்து பேசினால்.

ஆக இந்தக் குறளில் தீமை பயப்பனவற்றை பேசாதே என்று சொல்லியதை விட பேச்சைக் குறை என்றும் சொல்லியிருக்கிறார் என்பதே மறுபார்வை..

மனம் போனபோக்கில் பேசாமல், நாம் சொல்லும் சொல்லின் நன்மை தீமை அறிந்து தீமை விளைவிக்கும் சொற்களை சொல்லாமல் இருக்க வேண்டும். அதுதான் வாயின் பண்பான வாய்மை...

உள்ளத்தில் எண்ணுவதைப் பற்றி அதாவது உண்மை பற்றி வேறு சில இடங்களில் வள்ளுவர் சொல்லியிருக்கார். அவை வரும் பொழுது பார்ப்போம்.

No comments:

Post a Comment