குட் மார்னிங் சொல்லுங்க தலைவி
நைட் சிஸ்டம் off பண்ணலை ஏன்
ஆமாம்,, அப்படியே மடியில வச்சுகிட்டே தூங்கிட்டேன்நினைச்சேன்.. G-Talk la idle la இருந்திச்சி. காலங்காத்தாலே மன்றத்துல தனியா என்ன பண்ணுறீங்க
நீங்க யாராவது பேசுவீங்கன்னு தான். பேய் உலவுதாம் அதான் பாக்கலாம்னு
தாமரை அண்ணாவ பாத்ததும் பேய் எல்லாம் ஜீட்
என்ன ஓடிப்பிடிச்சி விளையாடுமா?ஆமா
நான் சின்ன வயசில வயசானவ்ங்க கிட்டப் பழகினேன்.. வளர வளர என் நண்பர்களுடைய வயது குறைஞ்சுகிட்டே வருது
இதுவும் நல்லது தான்.. ஏன்னா எப்பவும் இளமை...
நீங்க ஓவியா மாதிரி லூட்டி அடிக்கறீங்க ஆனா மோசம்ஏன்
பணக்காரியா இருக்கீங்க ஓவியா அப்பப்ப பிரிச்சுக் குடுப்பாங்க
என்ன கொடுமை இது.. உங்களுக்கு பயந்து தான் பத்தாயிரத்த வெளிய குடுத்து வச்சிருக்கேன்
மன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வந்து அரட்டையடிச்சா ஐ கேஷ் குறையனும்
அப்ப நான் Zero க்கு வந்துருவேன்
ஆக்கப்பூர்வமா எழுதினா ஐகேஷ் அதிகரிக்கணும்னு மாத்தப்போறேன். ஏன் மைனஸூக்கு போக மாட்டியளோ
ஆகா, ஹீ..ஹீ... நான் யாரையாச்சும் மிரட்டியாச்சும் பிடுங்கியிருவன்
என்ன ஃபோட்டே அனுப்பிருவியா? இதுக்கெல்லாம் அசர மாட்டமில்ல. பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது
பாக்கலாம்.
அதிருக்கட்டும், நான் சொன்ன மனசிடை தூரம் பத்தி என்ன நினைக்கிற?
நான் சின்ன வயசில வயசானவங்க கிட்டப் பழகினேன்.. வளர வளர என் நண்பர்களுடைய வயது குறைஞ்சுகிட்டே வருது. இது பத்தியா?
ஒரு மாதிரி எல்லாரும் பேச்சுத்துணைக்கு ஏங்கறீங்க.. விஞ்ஞானம் வளர்ந்து மனிதனுக்கு மத்தியில தூரத்தைக் குறைச்சு, மனசுக்கு மத்தியில தூரத்தை அதிகப்படுத்திருச்சி இதைப் பத்தி
ஆமா இது உண்மை தான்.. ஆனா விஞ்ஞானம் வளர்ந்ததால தான மனிதனுக்கு மத்தியில தூரம் அதிகரிச்சிருக்கு
அருகில் தூரப்பட்ட மனங்கள் தூரமுள்ள மனங்கள் அருகில்..இதை ஏன் ஹைக்கூவா நீங்க எழுதக் கூடாது? முயற்சி பண்ணுங்களேன்
தாராளமா எழுதலாமே...ஆனா அது எனக்கு இல்ல உதிக்கணும்
இங்க ஒண்ணும் தோணலையே.. அப்ப எப்பிடி எழுதுறது
குழந்தை முதல்ல தானா பால் குடிப்பது இல்லை. பழகிட்டா அப்புறம் சரியாயிடும்
நானும் முந்தி எழுத எவ்ளவோ முயற்சி பண்ணுனேன்.. ஆனால் ஒன்னும் உருப்படியா வரலை அதான் விட்டுட்டேன்
அப்ப உங்க அண்ணன் இல்லை. இப்ப இருக்கார்
சரி ஓக்கே.. அருகில் தூரப்பட்ட மனங்கள் தூரமுள்ள மனங்கள் அருகில்..
..
விளக்கம்
இதை சரியா வரி பிரிக்கணும். செய் பார்ப்போம்
அருகில்
தூரப்பட்ட மனங்கள்
தூரமுள்ள மனங்கள்
அருகில்..
அதேதான். விளக்கம் சொல்லு
நான் உங்ககிட்ட கேட்டா, நீங்க என்னை சொல்ல சொல்லுறீங்க
சரி வீட்டில அம்மா சீரியல் பாக்கிறாங்க..
வெயிட் நான் சொல்லுறேன்
அப்பா ஃபிரண்ட்ஸோட டூர் போயிடறார். அண்ணனுக்கு சைட் அடிக்கவும் சினிமா பார்க்கவுமே டைம் சரியா இருக்கு
நானோ இங்க இப்படி பதிவு செஞ்சுகிட்டு இருக்கேன். அருகில் உள்ள இந்த மனசுகள் தூரப்பட்டு விட்டன. அப்போ தான் பிரண்ட்ஸ் ரொம்ப தேடும்
ஆயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கும் மனங்கள் ஒரு நாள் நான் வரலைன்னா காணோம்னு தேட ஆரம்பிச்சுடுறாங்க
ரெண்டே வரி தான்... ஆனா நச்சின்னு இருக்கு
நச்சினார்க் கினியர்யாரு இது
நச்சுன்னு சொன்னார்
ஓ
சும்மா ஒரு மொக்கை கவித எழுதிப் பாக்கலாம்னு, நச்!
வேற ஒரு குட்டி கவிதை சொல்லுங்க. நான் பொருள் சொல்லுறேன்
பேசு தானா வரும்
தானா பேசினா அக்கா கீழ்பாக்கத்துல கொண்டு போய் விட்டிருவா
அவங்களோட பேசினா அவங்க போயிருவாங்களே
ஹீ..ஹீ... பின்ன நான் என்ன பண்ணுறது
அவன் பேசியதைக் கேட்க
ஆயிரம் பேர்
பைத்தியமாய்
அவர்கள் போனபின்பும்
பேசினான்
பைத்தியமாய்
இப்ப ஏன் அவன் பேசினதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்க்ள் போயிட்டாங்கன்னு சொல்ல்ணும்
ம்
சொல்லு பார்ப்போம்
ஒரு வேளை அவர் பைத்தியங்களின் வைத்தியரோ
பிரியாணி தீர்ந்தது
புரியலை
அவன் பேசியதைக் கேட்க
ஆயிரம் பேர்
பைத்தியமாய்
பிரியாணி தீர்ந்தது
அவர்கள் போனபின்பும்
பேசினான்
பைத்தியமாய்
ஓ
புதுக்கவிதை ஒரு பீடா
ம்
வார்த்தை வெற்றிலையில்
கருத்துப் பாக்கும்
மற்ற மசாலாக்களும்
வைத்து மடித்து
என்னம்மா அசந்து பாக்கிற எதாவது சொல்லு. கவிதை என்பது இப்படித்தான் ரொம்ப்ப்ப்ப சிம்பிள் பழகினால் எதுவும் எளிது..
அண்ணன் மாதிரி இல்லையா. ஹி ஹ நிச்சயம் எனக்கு முன் மாதிரி தான்
முன் மாதிரிஅலோ.. நான் சொன்னது முன்மாதிரி
முன்ன மாதிரியில்ல
முன்ன மாதிரி
பிரிக்காதீங்க ஆமா
முன் மாதிரி
இப்ப இல்ல
கரெக்ட்
முன்மாதிரி
முன்ன மாதிரி இல்ல
முன்ன மாதிரி
முன் மாதிரி இல்ல
இதுக்குப் பேரு தான். எதிர் பொருள் கவிதை
நினைச்சேன்
வார்த்தைகள் அதேதான். பொருள் நேரெதிர்
அழகா பயன்படுத்தணும்
அதுசரி..
எதையும் புதுக்கோணத்தில பார்த்தா
அதில கவிதை இருக்கும்
அதுக்காக தலையைச் சாச்சுகிட்டு
கோணையாப் பாக்கக் கூடாது
ஹீ..ஹீ.. மன்றத்துல பிரிச்சி பொருள் எடுக்கிற எல்லாருக்கும் கத்து குடுத்தது நீங்க தானா
அதுக்குப் பேரு பிக்பாக்கெட். அதாவது அடுத்தவன் வரிகளில் இருந்து அர்த்தம் திருடுவது
இதுக்காக அக்னி ஓவியன் அமரன் கூட எல்லாம் நான் எப்பவும் சண்டை போடுறேன்..
பிரிச்சுப் பார்த்தாலும்
சேர்ந்தே இருக்கிறோம்
பொருள் எங்களுக்கு துச்சம்
அன்பு மட்டுமே மிச்சம்
அப்படின்னு ஒரு கவிதை போட்டுருங்க
முடிஞ்சது கதை
சூப்பர்.. அடுத்த முறை பிரிக்கட்டும்..
பிரிச்சு மேஞ்சிடுங்க
விடுறதா இல்லை
இதுதான்..
கவி என்றால் அழகு
அதனால் தான் பெண்களை
கவிதை என்கிறோம்
கவிதை கருவைச் சுமந்து பிரசவிக்கிறது
அதனால் தான் கவிதைய
பெண் என்கிறோம்
இதெப்பிடி கீது
நல்லாகீது.. பெண்களை கவிதை அப்படிங்கிருங்க
ஆமாம். இல்லேங்கறியா? கவிதை எய்தறது இம்புட்டு சிம்பிள்மா.. அய்யே இதிக்குப் போயா பேஜாராய்ட்டுக்கிற
பேசிகிட்டே, நானும் தமிழும் எழுதிகிட்டே இத்தனை எழுதினா அமைதியான மனசில எத்தனை இருக்கும்
நிறைய இருக்கும்
ராங்கும்மா அமைதியான மனசில் ஒண்ணுமே இருக்காது எதாச்சும் இருந்தா மனசு
அமைதியா இருக்காது
ஹா ஹா ஹா
ரைட்டுப்பா
ஆனா துள்ளினாலும் மனசை கட்டியிரலாம்
துள்ளும் மனசைக் கட்டலாம்
கட்டிய மனசு துள்ளினால்
வெட்ட வேண்டியது தான்
எதிர் பொருள் கவிதை முயற்சி பண்ணு
அதுதான் ரொம்ப ரொம்ப ஈஸி.,
மக்களும் ஆஹா ஓஹோ ஏஹே ஹை ன்னு பாராட்டுவாங்க
அமைதியான மனசில
ஆயிரம் இருக்கும்
அமைதியாய்
அண்ணன் தூங்கியாச்சா
அதுக்குள்ளவா இல்லை
பின்ன சத்தமே இல்லை
நானும் தமிழும் எழுதிகிட்டு இருக்கேன், அந்தப் பக்கம்
ஓ.. அது ரொம்ப interesting போயிட்டு இருக்கு
இன்னும் ரெண்டு அத்தியாயத்தில் ஸ்பீடு பிச்சுகிட்டு போகும்
காலெஜ் வந்தாலே ஸ்பீடு ஜாஸ்தியாயிரும்
யார் கண்டும் காணாமல் போறாங்க
என் பிரண்ட் தான்...
எந்தக் கஷ்டத்திலயும்
ஃப்ரண்ட்ல இருந்து
உதறவன்
உதவுகிறவன்
ஃபிரண்ட்
இல்லையா
எப்படி இப்படி.... ??
மொழி என்பது வார்த்தைகள் தான்
கவிதை என்பது உணர்வு
ம்ம் சரிதான்... நானும் இப்போ நீங்க கிளம்புறதுக்குள்ள ஒரு கவிதை எழுதி காட்டலாமுன்னு நினைச்சா .. அப்படியே நிக்குது
இங்க எழுது
ரெண்டு வரியையே மேலையும் கீழயுமா மாத்து மாத்து போட்டுட்டு இருக்கேன்
மாத்தா? எஸ்கேப்
ஏன்
கிண்டலைக் கூடப் புரிஞ்சுக்காத அப்பாவியா இருக்கியே!
ம்ம் என்ன செய்ய
நச் நச் என்று
நச்சு விட்டால்..??
சரி சரி.. நான் போகணும் வர்ட்டா? பை
ம்ம் ஓக்கே..
பை
Bye..tc..tc
உங்களுக்கு "எழுத்து" வசப்படுது,ஏதாவது திரட்டியில் சேர்ந்துகொள்ளுங்கள்,வாசகர் வட்டம் பெருகும்.புதிய அறிமுகங்கள் உருவாகலாம்.
ReplyDelete