தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு. (396)
இறைக்க இறைக்க ஊறும் கிண்று.. இறைக்கப்படாவிட்டால் பாழும் கிணறு,,,
கற்றல் என்பது ஆழத்தோண்டப்படும் கிண்று என்பதை விட இறைக்கப்படும் கிணறு.. என்பதே சரியாகப் படுகிற்து..
மணற்கேணி என்பது ஆற்றங்கரையில் மணலில் தோண்டப்படுவதாகும். ஆற்றின் உயர்த்திய கரையையும் உடைக்காமல், சுத்தமான நீரைப் பெற வழி,,,
பெரியோர் என்போரின் அருகில் இருந்து அவரின் வார்த்தைகளை வடிகட்டிப் பெறுவதே மணற்கேணி நீர்...
ஆழம் அங்கு மிகப் பெரிய பொருட்டல்ல... இறைக்கப்படுதலே முக்கியம்..
ஆக கற்றலை எப்படிச் செய்தல் வேண்டும் என்றும், அது எதற்குச் சமம் என்றும் இரண்டு மாங்காயை ஒரே கல்லில் அடித்திருக்கிறார்..
அதாவது, பெரியோரின் அருகிருந்து, அவரது வார்த்தைகளை வடிகட்டி, அதை நாள்தோறும் கடைபிடித்தல் மூலமே கற்க முடியும்...
எவ்வளவு அதிகம் கற்றதை உபயோகிக்கிறோமோ அவ்வளவு அதிகம் அறிவு வளரும். வெறுமனே படித்துக் கொண்டே இருப்பதால்???? வளராது...
சரிதானே!!!
No comments:
Post a Comment