தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய் வருத்தக் கூலி தரும்.
தெய்வத்தான் ஆகாது எனினும்..
இதை இரு வித அர்த்தங்களுடன் காணலாம்...
1. ஒரு விஷயத்தை முயற்சிக்கிறோம்.. அது நடக்காமல் போகிறது.. காரணமே தெரியவில்லை.. சில சம்பந்தமில்லா எதிர்பாராத நிகழ்வுகளால்.. விதி என்போர் உண்டு.. தெய்வ சித்தம் என்போர் உண்டு,,
2. கடவுளால் கூடச் செய்ய முடியாத இயலாத காரியம் இது என்று அனைவருமே சொல்கின்றனர்.. அப்படிப்பட்ட கடினமான காரியம்..
ஆக அப்படிப்பட்ட கடினமான காரியம் என்றாலும் முடிந்த வரை முயலுங்கள்.. உங்கள் முயற்சிக்கேற்ற பலன் கிடைக்கும். என்கிறது குறள்..
காரியம் முடிந்த பின் சொல்லும் ஆறுதலா?
இல்லை, முயற்சியைத் தொடங்கக் கொடுக்கும் உற்சாகமா?
யோசிக்க வேண்டியதிருக்கிறதுதானே!!!
குறளை வடிவம் மாறாமல் கொடுப்பது நன்று. பொருள் சொல்வோர் பதம் பிரிக்கட்டுமே!
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சித்தன்
மெய்வருத்தக் கூலி தரும்.
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக்கூலி(பாடுபட்டதற்கான பலன்) தரும்
இப்படிக் கொடுத்தால் நன்றாக இருக்குமே!
No comments:
Post a Comment