எங்க குழு ஜெர்மனுக்குப் போனோமுங்க.. ஒரு வார ட்ரெய்னிங். அதில நம்ம முத்து இருக்காரே முத்து அவரும் நம்ம இராகவேந்திரரும் மட்டும் சைவம்..
நாங்க தங்கியிருந்த விடுதி சமையல்காரர்கள், உபசரிப்பாளர்கள் ரொம்ப்ப்ப்ப்ப நல்லவங்க..
மக்கள் வெஜிடபிள் ஃபிரட் ரைஸ் க்கு ரெஸிபி குடுத்து கூடவே இருந்து சமைக்கவும் கத்துக் கொடுத்து சாப்பிட்டோம்னா பார்த்துக்குங்க.
இரவு உணவு வேளை. நம்ம முத்து ரொம்ப ரொம்ப ஆசைப்பட்டு,
சாதம், பட்டர்மில்க் (மோர்) மற்றும் வேக வச்ச காய்கறிகள் என்று ஆர்டர் பண்ணிட்டாருங்க..
முதல்ல சாதமும் காய்கறியும் வந்தது. உபசரிப்பாளர் பட்டர்மில்க்கை கொண்டுவந்து வச்சுட்டு எங்களையே அதிசயமாப் பாக்குறான்.
நம்ம் முத்து சாதம் போட்டு பட்டர்மில்க் போட்டுக் கலந்து எடுத்து வாயில வச்சா!!!
அவர் முகம் அஷ்ட கோணலாப் போனது..
என்ன விஷயம்னா, அந்த உபசரிப்பாளர், ரொம்ப ரொம்ப கடமை உணர்வோட
பாலில் வெண்ணையைப் போட்டு கலக்கிக் கொண்டுவந்து வச்சிருந்தார்.
பாவம் முத்து அதையும் கஷ்டப்பட்டு சாப்பிட்டார்.
காலை காண்டினெண்டல் உணவு, ரொட்டிகள், பழங்கள், சீரியல்கள், ஆம்லெட் இப்படிப் பலவகையான உணவு வகைகள், மற்றும் தயிர், மோர், பழரசங்கள் என அமர்க்களமான உணவு.
பல்கேரியன் பட்டர்மில்க் முத்துவைப் பார்த்துச் சிரியா சிரிச்சது.. தினம் இரண்டு கோப்பை எடுத்து வச்சுக்குவார்.
இன்னமும் மோரைப் பார்த்த புன்னகை வருங்க. அது மோர் விக்கிற பொண்ணைப் பார்த்து இல்லை. இதை நினைச்சுதான். சொன்னா நம்பணும்.
அடுத்த நாள் காலையிலிருந்து இரண்டு கோப்பை மோரை (பல்கேரியன் பட்டர் மில்க்) தனியா எடுத்து வச்சுக்க ஆரம்பிச்சார் முத்து.
No comments:
Post a Comment