Wednesday, December 2, 2009

வானவில் - கவிதை

இதய மேகத்தில்
அவள் பார்வை செய்த
நிறப்பிரிகை கவிதை..
வானவில்

இதய மேகத்தில்
அவள் பார்வை செய்த
நிறப்பிரிகை
வானவில்
கவிதை

கவிதை வானவில் :

வர்ணங்கள் கொண்டது
நிரந்தரமில்லாதது
மாயத்தோற்றம்
அந்த நேரத்து அதிசயம்

வானவில் - கவிதை


ஒன்றைப் பலவாக்கி வார்த்தைகளின் ஜாலத்தை
கவிவானில் காட்டுவது..
இந்த மேகம் நிரந்தரம்..
ஒளியும் முழு அகப் பிரதிபலிப்பு
உள்ளுக்குள் ஓராயிரம் அர்த்தங்கள்

No comments:

Post a Comment