Wednesday, December 2, 2009

உன்னில் என்னைக் கண்டேன், சின்னப் பெண்ணே! !

ஹி ஹி டக்குன்னு பல பேருக்கு புரிஞ்சிருக்கும் நான் என்ன எழுதப் போறேன் இந்தத் திரியில அப்படீன்னு!!!

ஆமாம் ஸ்வேதாதான்.

பல முறை செய்கைகளையும் வார்த்தைகளையும், முகபாவங்கள் நடிப்பு போன்றவற்றைப் பார்க்கும்போது நம்மை நம் குழந்தைகளில் நம்மைக் காண்போம் இல்லையா?

அதில கொஞ்சம் பகிர்ந்துக்கலாம்னுதான் இந்தத் திரி!!

அன்று ஒருநாள்..

வீட்டுக் கூடத்தில் ஸ்வேதா சோஃபா மேல சேஃபா ஏறி நின்னா....

என்ன செய்யற? அப்படின்னு கேட்டேன்

நான் ஹைட்டாய்கிட்டு இருக்கேன் அப்படின்னா ஸ்வேதா...

அப்ப நானு? அப்பா - மகள் சம்பாஷணையில் சட்டென்று தாய் உள்நுழைய...

வெய்ட்டாய்கிட்டு இருக்க.... சட்டென்று ஸ்வேதாவிடமிருந்து வந்தது பதில்.

பிறகு என்ன நடந்திருக்கும்னு உங்களுக்கேத் தெரியுமே...
=========================================================================================


பள்ள்ளியில் ஆரஞ்சு வண்ண காய் கனிகள் வேடத்தில் வரச்சொல்லி இருந்தாங்க ஸ்வேதாவை..

நமக்குத் தெரிஞ்சது ஆரஞ்சுப் பழம், பப்பாளிப் பழம், கேரட் இவ்வளவுதானே...

ஒரு பெரிய சார்ட் வாங்கி கேரட் வரைஞ்சு, மேல கொஞ்சம் பச்சையா தழை வரைஞ்சு வெட்டியெடுத்து தயார் பண்ணினோம்..

ஆரஞ்ச்சு வண்ண கால்சட்டை, பச்சை நிற மேல்சட்டையோட கேரட் கழுத்தில் தொங்க இன்னிக்கு காலையில் ரெட்டியானாள் ஸ்வேதா. நான் பள்ளியில் கொண்டு சென்று இறக்கி விட்டு விட்டு ஆஃபீஸ் போகணும்..

கேரட் அலங்காரம் மாத்திரம் போதுமா? எதாவது பேசனுமே...

காரில் ஏறினப்புறம்தான் அந்த ஞாபகம் வந்தது.. ஓடற காரில் ஒரு பாட்டு எழுத ஆரம்பிச்சோம்..

I am the Carrot - I am the Carrot
Orange is my colour - Orange is my Colour
Eat me in the salad - Eat me in the salad
Good for eyes - Good for eyes

(Are you sleeping - Are you sleeping brother john - ட்யூனில் படிக்கவும்)

இதை 2 நிமிடத்தில் மனப்பாடம் செய்தாள் ஸ்வேதா..

இதைச் சொன்னா டீச்சர் என்ன சொல்வாங்க தெரியுமா? நான் கேட்டதுக்கு

வெரி நைஸ்...

அப்படின்னு சொல்லிட்டு

குட் ஃபார் ஐஸ் - வெரி நைஸ்

சொல்லிட்டு சந்தம் புரிந்த பென்ஸ் மாதிரி சிரிச்சா..

சரிதானே!!!

ஆசிரியை எதிர்பார்க்கவே இல்லை போல இருக்கு...


கேரட் டிரஸ் போட்டவங்க எல்லாம் ஃபோட்டோ எடுத்துக்க வாங்க என்று அழைத்ததும், ஸ்வேதா எழுந்து மிஸ் ஐ வாண்ட் டு டெல் எ ரைம் என்று சொன்னாளாம்.

மிஸ்ஸிற்கு புரியலை,,, யூ கேன் டெல் த ரைம் ஆஃப்டர் இன் த கிளாஸ் அப்படின்னு சொல்ல...

அதை கண்டுக்காம காரட் பாடலை பாடியிருக்கா ஸ்வேதா...

மிஸ் ரொம்ப பரவசமாகி, ஒன்ஸ் மோர் கேட்டு அப்புறம் கைதட்டலும் நட்சத்திர அந்தஸ்தும் கொடுத்தாங்களாம்...

வீட்டிற்கு வந்த உடனே ஃபோன் செய்து சொன்னாள்..

நாளை இராணுவ உடுப்பு அணிந்து பள்ளி செல்ல இருக்கிறாள். அனிருத்திற்கு வெள்ளை உடை...

மிகப் பெரிய அணிவகுப்பு காத்திருக்கு.. தயார் செய்யணும்...

வர்ட்டா?


=========================================================================================

எங்களோட தோழி அவர். ஒருமுறை தன் தங்கையின் கல்யாணத்திற்கு அழைப்பதற்காக வீட்டுக்கு வந்தாங்க. அழைப்பு முடிந்ததும், சரி நேரமாச்சி, நான் வீட்டில கொண்டு வந்து விடறேன் என நானும் கிளம்பினேன்..

ஸ்வேதா நானுக் வர்ரேன் எனக் கூடவே ஏறிகிட்டா..

போகும் வழியெல்லாம் அந்தத் தோழி தன் மாமியாரின் கண்டிப்புகள், அதிகாரங்கள் பத்தி கதை சொல்லிகிட்டே வந்தாங்க.. நாலு வயசு ஸ்வேதாவும் கேட்டுகிட்டே வந்தா...

வீட்டுக்குப் போனாதும் ஸ்வேதா வோட ஃபிரண்ட் ஐஸ்வர்யாவோட கொஞ்சம் விளையாடட்டும் என்று அவங்க வீட்டுக்குள்ள போனோம். அந்தத் தோழியின் தங்கை ஐஸ்வர்யாவை அழைச்சிகிட்டு முன் ஹாலுக்கு வர ஸ்வேதா கேட்டாள்

"எங்க உங்க மாமியார்?"

திரு திரு வென தங்கை முழிக்க, அக்கா பதட்டமாய் ஓடி வர..

"உங்க மாமியாரை வரச் சொல்லுங்க நான் பேசறேன்"

எல்லோரும் அதிர்ச்சியில் திக்கு முக்காடிப் போயிட்டாங்க...

உடனே ஸ்வேதாவை ஐஸ்வர்யா ரூமுக்கு பேக் பண்ணி அனுப்பிட்டு பின்ன்ர் சமையற் கட்டில் இருந்து அவங்க மாமியாரைப் பார்த்தி பேசிட்டு அப்புறம் அப்படியே கப்சிப்புன்னு அழைச்சிகிட்டு வந்துட்டேன்.

அந்தத் தோழிக்கு நல்ல பாடம்.. நல்ல வேளை மாமியார் கூடத்தில் இல்லை. இருந்திருந்தா???

=========================================================================================

ஒரு முறை அழ ஆரம்பித்தாள்..

நான் சமாதானம் செய்து கொண்டிருந்தேன்...

நீ என்னிக்காவது எனக்கு ஒரு கிஃப்ட் வாங்கித் தந்திருக்கியாப்பா? நீ சுத்த வேஸ்டுப்பா என்று சொல்ல...

நான் வாங்கித் தந்ததை ஒண்ணொன்னா சொல்லச் சொல்ல

அது அம்மா வாங்கித் தரச் சொன்னது.. அது அண்ணன் செலக்ட் பண்ணினது இது சித்தி சொன்னது.. அது அவர் சொன்னது இது இவர் சொன்னது என லிஸ்டுல இருக்கிற எல்லாத்துக்கும் ஒரு காரணத்தைச் சொல்ல ஆரம்பித்தாள்..

ஊஹூம் இது சரிப்பட்டு வராதென வேற வழி முயற்சி பண்ணினேன் சரியாயிட்டா..

நீ என்னிக்காவது நீயா எனக்கு முத்தம் குடுத்தியா எனக் கேட்க...

ம்ம்ம்

இப்ப எல்லாம் சரியாப் போச்சுது...

அதான் நானா சர்ப்ரைஸ் கிஃப்ட் தர்ரதும்... அவளா முத்தம் தர்ரதும்..

No comments:

Post a Comment