Wednesday, December 2, 2009

அப்பா மாடு!!!

மாடு நமக்கெல்லாம் அப்பா மாதிரி அமரன்..

பசு நமக்கு பால் கொடுத்து அம்மா வா இருக்கு. அதே சமயம் மாடு???

வீட்டுக்கு உழைச்சு கொட்டுது..

விளைஞ்ச்தையெல்லாம் வீட்டுக்கு கொண்டு வந்து சந்தைக்குக் கொண்டுபோய் பணமாக்க உதவுது..

அப்புறம் குடும்பத்தை பல இடங்களுக்கு அழைத்திச் செல்வது...

இதுமட்டுமில்லை...

ஜல்லிக் கட்டில் மாட்டை அப்பாவாகவும் அடக்க வருபவர்களை மகன்களாகவும் நினைச்சுப் பாருங்க புரியும்...

இவ்வளவு செய்யற மாட்டுக்கு ஒரு நாள் பொங்கல் வச்சி மரியாதை பண்ணினா போதுமா?

சாப்பாடு கூட...அப்பா மாதிரிதான் மாட்டுக்கும்

அரிசியை நாம சாப்பிட்டு விட்டு மாட்டுக்கு வைக்கோல் கொடுப்போம்,.

கடலையை நாம சாப்பிட்டு விட்டு பொட்டு புண்ணாக்கை மாட்டுக்கு கொடுப்போம்..

எண்னையை நாம எடுத்துகிட்டு புண்ணாக்கை மாட்டுக்கு கொடுப்போம்...

அப்பாக்களும் அப்படித்தான், பீஸாவின் கிரஸ்ட், எலும்புகளுடன் ஒட்டிய கறி இப்படி குடும்பத்தினர் ஒதுக்கும் பகுதிகளை உண்டு சந்தோசமா குடும்பத்துக்கு உழைப்பவர்கள் அவர்கள்.

(நான் சொல்றது நல்ல அப்பாக்களைப் பற்றி)

அப்பனைச் பிச்சுப் பிச்சுத் திங்கிற மகன்களும் உண்டு...

செத்தாலும் மாட்டுத் தோல் அடிபட்டு சத்தம் எழுப்பிச் சந்தோஷம் கொடுக்கும்.. இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்து செத்தாலும் நன்மை தரும் அப்பா மாதிரி

பால் கொடுக்கும் பசுவுக்கு அன்பும் பாசமும் வசதிகளும் கிடைக்குது...

ஒரு தந்தையாய் குடும்பத்திற்கு உழைக்கும் மாட்டுக்கு என்னிக்காவது அப்பா ஸ்தானம் கொடுத்திருக்கமா???

அதை விடுங்க.. அப்பாவுக்காவது அவருக்கு உரிய ஸ்தானம் கிடைச்சிருக்கா என்ன?

No comments:

Post a Comment