Tuesday, December 1, 2009

கடவுள்

எத்தனையோ மதங்களைப் பற்றி, சமயங்களைப் பற்றி படித்துக் கொண்டு வருகிறேன்.

நமக்கு முன்னால் பிறந்தவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்று நினைப்பது முட்டாள்த்தனம். அதை விட முட்டாள்தனம் நமது முன்னோர்கள் எல்லாம் அறிந்தவர்கள் என்று நினைப்பது.

மதங்கள்.. கடவுள்.. அனைத்து நம்பிக்கைகளுக்கும் முழு முதல் காரணம் என்ன? கடவுள்களைப் பற்றி பேசும் மத்ங்களின் அடிப்படை சாரம்சம் என்ன?

ஜனனம் மரணம் இவற்றை விளக்குவது தானன்றி வேறெதுவும் இல்லை..

பாவத்தின் சம்பளம் மரணம் என்கிறது ஒரு பக்க மதங்கள். ஜனனத்தின் காரணம் பாவம் என்கிறது இன்னொரு பக்க மதங்கள்..

இந்த ஜனன மரணங்களை இணைக்கும் ஒரு காரணியாகவும்.. விடை தெரியாத கேள்விகளுக்கும்.. தன்னை மீறிய நிகழ்வுகளுக்கும் மனிதன் இட்ட பெயர் கடவுள்.

எவனொருவன் மதங்களின் இந்த உண்மையை உணர்ந்து உண்மையான காரணத்தை அறிய விழைகிறானோ அவன் தர்க்கம் புரிவதில்லை. க

டவுளை சார்ந்திருக்க வேண்டிய நிலைமையோ அல்லது கடவுளின் மாட்சிமையை காப்பாற்ற வேண்டிய கடமையோ அவனுக்கு இருப்பதில்லை.

மரணம் மரணித்து விட்டால் கூடவே மதங்களும் மரணித்து விடும்.


இன்றைய மதங்கள் மனிதனை நல்வழிப்படுத்துவதை விட அவனுடைய மரண பயத்தை தற்காலிகமாக மாற்றவே உதவுகின்றன.

இறந்தால் மீண்டும் பிறப்போம் என்றும்..

கடைசித் தீர்வு நாளில் உயிர்பிக்கப் பட்டு சொர்க்கமும் நரகமும் வாய்க்கும் என்றும் கதைகள் சொல்லப்படுகின்றன.

கடவுளை நம்புவதற்கும் மதங்களை நம்புவத்ற்கும் நிறைய வேறுபாடு உண்டு...

விரல் நகக்கணுக்குள் உள்ள ஒரு அணுவுக்கு தான் எதனில் ஒரு பகுதி என்று தெரியுமா?

அதனின் உலகமெல்லாம் அருகிலிருக்கும் சில பல செல்கள்தான்,

அவற்றிலும் அணுக்கள்.. எலக்ட்ரான்கள்.. ப்ரோட்டான்கள் நியூட்ரான்கள் கொண்ட அணுக்கருக்கள்..

அதைப்போல்தான் பிரபஞ்சத்தை பற்றிய நம் அறிவு..

இதிலே கற்பனைகளுக்கெல்லாம் இட்டுகட்டி பதில் தேடிக்கொண்டு இருப்பதை விட இன்னும் கொஞ்சம் அறிந்து கொள்வோம் என்ற விருப்பமே தேவை...

எப்படி எலெக்ட்ரான்கள் கருவை சுற்றுகின்றதோ அப்படித்தான் கிரகங்கள் சூரியனைச் சுற்றுகின்றன..(நீள் வட்டப் பாதை)

அப்படியே தான் கேலக்சிகளும் பெரிய கரும்புள்ளிகளை சுற்றுகின்றன.. ஒரு ஒழுங்கு முறை இருக்கிறது...

கடவுள் என்பது இதுதான் என்று கற்பித்துக் கொண்டு தேடுவதை தயவு செய்து படித்தவர்கள் விட்டு விட வேண்டும். ஏனென்றல் அது பலப் பல விஷயங்களை நம் கண்ணுக்கு புலப்படாமல் மறைத்து விடுகிறது.
.

அறிந்தவற்றை தொகுத்து வையுங்கள்.. அடுத்த தலைமுறைக்கு அது உதவும்.

No comments:

Post a Comment