Wednesday, December 2, 2009

துப்பாக்கி முனையில் நான்!

அது 1997 ஆம் வருடம் பிப்ரவரி மாதம்..

நான் அமெரிக்கா சென்று பத்துப் பதினைந்து நாட்கள்தான் இருக்கும். தோழன் யூனிஸ் முஸ்தபா, சாயந்திரம் வருவதாகச் சொல்லி இருந்ததால் தனியாக இருந்த நான், டெல்லியில் இருந்த என்னோட ஃபிரண்ட்ஸ் க்கு ஃபோஓன் பண்ண முயற்சி செய்தேன்.. டயல் பண்ணும் போதே ரிங்க் பேக் வரவே கட் பண்ணிட்டு, மறுபடி டயல் செய்தேன்.. ஒரு அஞ்சு நிமிஷம் பேசிட்டு வச்சிட்டு, தூங்க ஆரம்பிச்சேன்..


நல்ல வேளை முழுசாத் தூங்கலை

காலிங்க் பெல் அடிச்சது.. டொக் டொக்னு கதவைத் தட்டற சத்தமும் கேட்டுச்சி..

சே! யார்ரா அது தூக்கத்தைக் கெடுக்கறதுன்னு முனகிகிட்டே, பெர்முடாஸும் பனியனுமாய் போய் கதவைத் திறக்க...

அங்கே ஒரு பளபளக்கும் பிஸ்டல் என்னைக் குறிபார்த்துக் கொண்டிருந்தது...

அந்த மாமா (போலீஸ்) 6 அடிக்கு மேல் 120 கிலோவுக்கு மேல் இருப்பார். கதவு திறந்ததும் நான் திடுக்கிடுவதுக்கு பதில் அவர் திடுக்கிட்டார்னு தான் சொல்லணும்,. ஏன்னா என்னை ஹேண்ட்ஸ் அப் சொல்லவே இல்லை. இவ்வளவு சப்பையான ஒரு மேட்டரை எதிர்பார்க்கவில்லைங்கறது பார்வையிலயே புரிஞ்சுருச்சி..

சம்படி டயல்டு எமர்ஜென்சி ஃப்ரம் ஹியர்.. அவர் சொல்ல

ஓஹோ என்னாச்சுன்னு எனக்குப் புரிஞ்சிடுச்சி..

ஐ மைட் ஹாவ் டயல்டு இட் பை மிஸ்டேக். ஸாரி என்று சொல்ல..

ஐ நீட் டு ஸர்ச் த ஹௌஸ்னு சொல்லிட்டு உள்ள வந்தாரு.. சுத்தமா நொந்து போயிருப்பாரு.. ஏன்னா வீட்ல இரண்டு கம்ஃபர்டர் (அதாங்க குவில்ட், அதாங்க ரஜாய், கம்பளம் மாதிரி). ஒரு தலையணை, ஒரு பெட்டி தவிர வேற ஒண்ணுமே இல்லைன்னா.. ஒரே நிமிஷத்தில ஷோ மீ யுவர் ஐ டி ன்னு வெளிய வந்தாரு.. பாஸ்போர்ட் எடுத்துக் குடுத்தேன்.. பார்த்திட்டு ஸாரி ஃபார் தெ இன் கன்வீனியன்ஸ் னு சொல்லிட்டுப் போயிட்டாரு.

அதாங்க,, டெல்லி கால் பண்ணினேன் இல்லியா அதான் மேட்டர். ஐ.எஸ்,டி க்கு யூ எஸ்ல 011 டயல் பண்ணனும் அப்புறம் கண்ட்ரி கோட் அப்புறம் எஸ்.டி.டி கோட் அப்புறம் நம்பர்..

இந்தியா கண்ட்ரி நம்பர் 91. டெல்லியோட எஸ்.டி.டி கோட் நம்பர் 11.

நான் 011 அடிக்காம டைரக்டா 9111 அப்படின்னு டயல் பண்ண 911 எமர்ஜென்ஸி கால் போயிருக்கு, ரிங் பேக் வந்தவுடன் கட் பண்ணிட்டதால, போலீஸூக்கு டவுட்டு.. பிஸ்டலைத் தூக்கிகிட்டு வந்துட்டாங்க..

இதிலிருந்து கத்துக்க வேண்டியது என்னன்னா, இப்படி அவசர உதவி நம்பரை தவறாக் கூப்டுட்டா, கட் பண்ணிறாதீங்க.. தயவு செஞ்சு பேசிடுங்க.. இல்லைன்னா அதுவும் ஏற்கனவே வெறுத்துப் போன இதே போலீஸ் வந்ததுன்னா எதாச்சும் ஏடாக் கூடமானா நான் பொறுப்பில்லை.

முற்றும்

No comments:

Post a Comment