Friday, December 4, 2009

கன்னத்தில் முத்தம்

கன்னத்தில்
அவள் உதடுகள்
எழுதிய
காதல் வரிகள்
தாடி.....

அவளின்
உமிழ் நீர் கூட
உரமானது!

அவன் கன்னத்தில்
தாடி
அமோக விளைச்சல்

நானும் தானே
முத்தங்கள் இட்டேன்
நிலம் தரிசா
இல்லை
உரம் பழுதா


உரம் பழுதில்லை
கண்ணீர் என்னும்
உவர் நீர்
வெள்ளம் புகுந்து
நிலம் தான்
தரிசாய்...

கண்ணீரே கண்ணீரே
கரைத்தீரே உப்புகள்
உப்பிட்டவரை
உங்களால்
கரைத்துவிட முடியுமா?

உப்பிட்டவர் = பெற்றோர்

கண்ணீரில்
சில நேரம் கரைந்தது
உப்பிட்டவரின்
மனம்.
சில நேரம்
மானம்...

5 comments:

  1. ரொம்ப நல்லா இருக்கு...
    வித்தியாசமா பண்ணி இருக்கீங்க...

    ReplyDelete
  2. பாராட்டுக்கள், நல்ல கவிதை, அழகான வார்த்தைகள்.

    கற்பனையா? அனுபவமா!...:-)

    ReplyDelete
  3. அதிக முத்தம் வாங்கிய ஒரு பீலிங் தெரியுது

    ReplyDelete
  4. இது லாவணி என்ற வகையைச் சேர்ந்த கவிதைகள். பண்டைக் காலத்தில் அத்தைமகனும், மாமன் மகளும் ஒருத்தரை ஒருத்தர் கேள்வி கேட்டு பதில் சொல்லி (முதல்மரியாதையி.. ஏ..குருவி..சிட்டுக் குருவி.. பாட்டு இருக்கு இல்லியா அது மாதிரி)
    இன்பமாய் இருப்பது போல

    காதலனும் காதலியும் கேள்வி கேட்டு பதில் சொல்வது போல் அமைந்த புதுக் கவிதைகள் இவை,

    படித்து அனுபவித்து பாராட்டிய அனிவருக்கும் நன்றி!!!

    ReplyDelete
  5. மொத்தமும் முத்தமா.. வித்தியாசமா இருக்கு

    ReplyDelete