அப்ப எனக்கு 9 வயசு இருக்கும். எங்க அப்பா, ஜோசியரைப் பார்த்துட்டு வந்தார். ஜோசியர் பணநஷ்டம் வரும் திருடு போகும்னு சொல்லி இருந்தார். அதனால கையில இருந்த 32000 ரூபாயை பைக்கோட சைட் பாக்ஸில போட்டு பூட்டி வச்சிட்டுப் போயிட்டார்..
அப்பா பெங்களூர் போனபின் எங்க மூத்த அண்ணன் அவர் ஃபிரெண்டு கூட சினிமாவுக்குப் போக பைக் எடுத்துகிட்டுப் போக, ஒரு ஆக்ஸிடண்ட்..
கூட இருந்தவருக்கு விரல் துண்டாயிருச்சி.. பைக்ல கொஞ்சம் அடிபட்டிருச்சி, அண்ணா பைக்கை ஒர்க்ஷாப்ல விட்டுட்டார். அப்புறம் சரிசெய்து எடுத்து வந்தாச்சு..
அப்பா வந்து பார்த்தா 32000 ரூபாய் காணோம்.. பெட்டியைத் திறந்து ஒர்க்ஷாப்காரன் திருடிட்டான். ஆனா கேட்டா இல்லைன்னு சாதிச்சுட்டான்,,
அண்ணனுக்கு விழுந்தது செம அடி ..
அன்னிக்கு தாமரை அதைப் பார்த்துகிட்டு இருந்தான்.. 9 வயசு பையன்..
மனசுக்குள்ள ஒரு சபதம்.. நாமளா சம்பாதிச்சு நாமளா வாங்கினா தவிர அப்பா அண்ணன் தம்பியா இருந்தாலும் ஓசியில எதையும் உபயோகிக்கக் கூடாதுன்னு
இன்னிக்கு வரைக்கும் கடை பிடிக்கிறேன். அப்பாவோட பைக் அண்ணனோட M80, மூத்த அண்ணனோட பைக், டிவிஎஸ் ஃபிப்டி எதையும் தொட்டது கிடையாது..
நடந்து போவேன். பஸ்ல, ஆட்டோவில போவேன். ஆனா மத்தவங்க வண்டியைத் தொடமாட்டேன். எனக்கு பைக் ஓட்டக் கூட தெரியாது..
சொந்தமா கார் வாங்கினேன். கத்துகிட்டேன்.
வாழ்க்கை ஓடிகிட்டு இருக்கு..
இது தப்பா சரியா தெரியலை. ஒரு ஆத்திர அவசரம்னா என்ன செய்வதுன்னு யோசிக்கலை. ஆனாலும்..
ஓசி கேட்பது கஷ்டமாத்தான் இருக்கு!
No comments:
Post a Comment